செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழக பா.ஜ.க'வின் வீடியோ - துணிக்கடை விளம்பரம் போல இல்லாமல் கவனம் ஈர்க்கும் முயற்சி

மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழக பா.ஜ.க விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்ட விழிப்புணர்வு, விளம்பர வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது

Update: 2022-07-20 12:08 GMT

மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழக பா.ஜ.க விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்ட விழிப்புணர்வு, விளம்பர வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.


தமிழகத்தில் ஜூலை 28'ம் தேதி இந்தியாவில் உருவாகிய அற்புத விளையாட்டான சதுரங்கத்தை மையமாக வைத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் 44வது தொடர் பிரதமர் மோடியின் முயற்சியால் நம் தமிழகத்தில் குறிப்பாக பல்லவ மன்னர்களின் நகரமான மாமலாபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள உலகம் முழுவதிலும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த சுமார் 2000திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இந்த போட்டிக்கான ஒலிம்பியாட் ஜோதியை கடந்த மாதம் 19ம் தேதி பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் துவங்கி வைத்தார், இந்த விழாவில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பிரதமர் மோடி அவர்களுடன் கலந்து கொண்டார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி 28'ம் தேதி சென்னை வருகிறார்.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அணி சார்பில் அதன் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நம் நாட்டில் பிறந்த சதுரங்க விளையாட்டு எப்படி பரிணாம வளர்ச்சி பெற்று இன்று சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று உலக அளவில் தலைசிறந்த விளையாட்டாக இருக்கின்றது என்பதை விளக்கும் விதமாக மன்னர்கள் போர்க்களத்தில் இருப்பது போன்ற அனிமேஷன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் நம் நாட்டில் இருந்து செஸ் விளையாட்டில் உலக அளவில் புகழ் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த், பிரஞ்யானந்தா, விதித் குஜராத்தி, பண்டலா ஹரிகிரிஷ்ணா,வைஷாலி ரமேஷ்பாபு போன்ற வீரர்களை இடம்பெறச்செய்து சிறப்பாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையங்களில் வைரலாக வலம் வருகிறது.       




Similar News