கனிமவளத்துறையை துரைமுருகனிடம் இருந்து பிடுங்க பார்க்கும் தங்கம் தென்னரசு - வெடிக்கப்போகும் திமுக உட்கட்சி பூசல்!

கனிமவளத்துறையை துரைமுருகனிடம் இருந்து பிடுங்க பார்க்கும் தங்கம் தென்னரசு.

Update: 2023-05-18 00:30 GMT

தமிழகத்தில் திமுக ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் தற்போது தான் நிகழ்ந்து இருக்கிறது. குறிப்பாக இதற்குப் பின்னணியில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் ஆடியோ, இதற்கு மிக முக்கிய காரணம் என்று வெளிவட்டார தரப்பில் கூறப்பட்டு வருகிறது. முன்பு தமிழக நிதி அமைச்ராக இருந்த PTR பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இந்த ஆடியோவில் முதலமைச்சரின் மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாகவும், அதனை மறைக்க முடியாமல் திணறி வருவதாகவும் இடம்பெற்றிருந்தது. இந்த ஒரு ஆடியோ பதிவு தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமீபத்தில் கூட, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ வெளியானதுதான் அவரது இலாகா மாற்றப்பட்டதற்கு காரணம் என்றும், 30000 கோடி பதுக்கல் உண்மைதான் என்பதை இலாகா மாற்றத்தின் மூலம் முதல்வர் ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும், அதற்கு தண்டனையாகதான் அவரது இலாகா மாற்றப்பட்டுள்ளார் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.


இந்த ஒரு அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு துரைமுருகன் இடம் இருக்கும் கனிமவளத்துறையை பறித்துக் கொள்வதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை தங்கம் தென்னரசு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதற்க்கு அமைச்சர் துரைமுருகனும் முரண்டுபிடித்து வருவதாக செய்திகள் கிடைத்துள்ளன. இந்த ஒரு அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து தற்பொழுது தமிழகத்தின் புதிய நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்று இருக்கிறார். ஆனால் தனக்கு முதல்வர் உறுதி அளித்தபடி கனிமவளத்துறை ஒதுக்கப்படாது தான் காரணமாக அவர் மிகவும் வருத்தத்தில் இருப்பதாகவும் தகவல்கள் ஏற்கனவே வெளிவந்து இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் முக்கிய அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் விடுவிக்கப்பட்டு புதிய அமைச்சராக ராஜா பதவியேற்று இருக்கிறார். நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து பழனிவேல் தியாகராஜன் அவர்கள் விடுவிக்கப்பட்டடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றப்பட்டு இருக்கிறார். தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு தற்பொழுது நீதித்துறை வழங்கப்பட்டு இருக்கிறது.


அமைச்சரவை மாற்றம் குறித்து, முதல்வர் தரப்பில் பேச்சு நடத்தியபோது, தங்கம் தென்னரசு, நிதித் துறையை ஏற்க மறுத்து விட்டார். குறிப்பாக முதல்வர் அவர்கள் தரப்பிலிருந்து அவரை சமாதானப்படுத்தி நீதித்துறையுடன் சேர்த்து கனிம வளத்துறையும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்கள். அதன் பின்னரே அவர் நீதித்துறை அமைச்சராக ஆகுவதற்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்று செய்திகளும் தொடர்ச்சியான வண்ணம் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் சமயத்தில் கனிமவளத்துறை தற்பொழுது துரைமுருகன் வசம் இருக்கிறது. குறிப்பாக இது தொடர்பாக அவர் கூறும் பொழுது, மணல், கல், கிரானைட் குவாரிகள் என வளமான இந்த துறையை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டார். எனவே வாக்குறுதி அளித்தபடி தங்கம் தென்னரசிற்கு முதல்வர் தரப்பில் இருந்து கனிமவளத்துறை ஒதுக்கப்படாததன் காரணமாக அவர் அதிருப்தியில் இருக்கிறார். துரைமுருகன் தனது சகாக்களிடம் இது பற்றி கூறுகையில், 'என்னதான் ஒரே கட்சியை சேர்ந்த அமைச்சராக இருந்தாலும் என்னுடைய துறைக்கு அடி போட பார்க்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அதை பார்த்துக் கொண்டு என்னால் சும்மா தான் இருக்க முடியாது' என்று கூறியிருக்கிறார்.


இப்படி திமுக மூத்த தலைவரான துரைமுருகனிடம் கனிமவளத்துறையை பிடுங்க திமுகவிலேயே இருக்கும் அமைச்சர் ஸ்கேட்ச் போட்ட விவகாரம் அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பை எழுப்பியுள்ளது. ஏற்கனவே பல குழப்பங்கள் திமுகவில் வெடித்து வரும் சமயத்தில் தற்பொழுது திமுகவில் இப்படி துரைமுருகன் இலாக்கா மாற்றம் விவகாரமும் முதல்வருக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News