தொடர் ரெய்டு அடித்த சம்மட்டி அடி - அலறியடித்து அறிவிப்பு வெளியிட்ட டாஸ்மாக்!

Update: 2023-05-31 04:50 GMT

தமிழகத்தில் 6,434 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் தனியார் மது ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானம், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகிறது. இதன் மூலம், ஆண்டுக்கு சுமார் 47,000 கோடி ரூபாய் வருமானம் தமிழக அரசுக்குக் கிடைத்து வருகிறது.

தமிழகத்தில் படு ஜோராக நடந்து வரும் ஒரு துறையாகவும் டாஸ்மாக் துறை திகழ்ந்து வருகிறது. 2020 மே 6-ம் தேதி அன்று உயர் நீதிமன்ற உத்தரவில் கூட டாஸ்மாக் கடைகள் உரிய முறையில் பில்களை வழங்க வேண்டும் என்று கூறி இருந்தது. அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி அன்று மற்றொரு மனுவில் உயர் நீதிமன்றம் கூறுகையில், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்குவோருக்கு பில் வழங்கவும், மதுக்கடைக்கு வருவோரின் பார்வையில் படும்படி விலைப்பட்டியல் வைக்கவும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் முதன்மை இயக்குனர் சார்பில் மாவட்டம் தோறும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மதுபான கடைகள் மூலம் பெற்ற வருமானம் பற்றிய விவரம், மது அருந்துபவர்களை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஒவ்வொரு மதுபான கடையிலும் மதுபானத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூல் செய்வதை தடுக்க வேண்டும். கணினி மயமாக்கப்பட்ட ரசீது வழங்கப்படவும், போலி மதுபான விற்பனையை தடுக்க வேண்டும். இதற்கான உத்தரவு அரசுக்கு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 


ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் மதிக்காமல் பில் கொடுக்காமல் தற்போது வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பாட்டில்களில் குறிப்பிடப்படும் விலைகளை விட அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது. பாட்டிலுக்கு ரூபாய் பத்து அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஒரு பிரச்சனை தான் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த இருக்கிறது. என்னதான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், டாஸ்மாக் நிர்வாகம் விற்பனை செய்வதில் பில்களை கொடுக்காமல் மறுத்து வந்தது எல்லாம் ஒரு பக்கம் இருக்க....


மறுபக்கம் அதிகமான வருமானங்களை முறையற்ற வழியில் சம்பாதித்ததற்காக டாஸ்மார்க் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். இது என்னடா நமக்கு வந்த சோதனை நம்ம பாட்டுக்கு பத்து ரூபா ஒரு பாட்டிலுக்கு அதிகமாக வைத்து வித்தோமா, மறைமுகமாக பணத்தை சம்பாதித்தோமா என்று இருக்கும் பட்சத்தில் யாரோ ஒருவன் இதை போட்டுக் கொடுத்துட்டான் என்ற ஒரு கலக்கத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இருந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது குறித்து எதிர்க்கட்சிகளும் அமைச்சர் செந்தில்பாலாஜிதான் டாஸ்மாக் பார்களில் பத்து ரூபாய் அதிகம் வைத்து காரணம் என கூறிவந்தார்.  


உயர்நீதிமன்றம் உத்தரவு எல்லாம் போட்ட பிறக்கும் டாஸ்மாக் நிறுவனம் பில் கொடுக்காத நிலையில் தற்போது புதிதாக அதிரடியாக QR கோடு மூலம் நீங்கள் வாங்கும் பாட்டில்களின் தொகைகளை செலுத்தி விட்டு பில்களை பெற்றுக் கொள்ளலாம் என்று டாஸ்மாக் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஒருபுறம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்துகையில், மற்றொரு புறம் டாஸ்மார்க் கடைகளில் QR கோடுகள் மூலம் பணம் செலுத்தலாம் என்று முறை அமல்படுத்தப்பட்டு இருப்பது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டால் தான் டாஸ்மாக்கில் பில் கொடுக்கும் முறையை கொண்டு வருவார்களா? என்று அரசியல் விமர்சகர்கள், எதிர்க்கட்சிகள் தங்களுடைய கேள்விகளையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News