முறைகேட்டினை அம்பலப்படுத்திய தேஜஸ்வி சூர்யா- கொதிக்கும் பிரபலங்கள் & 'பத்திரிகையாளர்கள்'.!
பெங்களூரு தெற்கு பகுதியின் பா.ஜ.க எம்பி தேஜஸ்வி சூர்யா BBMPயின் 'படுக்கை ஒதுக்கீடு முறைகேட்டினை' அம்பலப்படுத்திய பிறகு, பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களில் ஒரு பகுதியினர் அவர் மீது வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
தேஜஸ்வி சூர்யா செவ்வாய்க்கிழமை அன்று கொரானா வைரஸ் நோயாளிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட படுக்கை முறையில் மோசடி நடைபெற்றிருப்பதாக உண்மையை வெளிக் கொண்டு வந்திருந்தார். அதாவது படுக்கைகளுக்கு செயற்கையாக ஒரு தட்டுப்பாடை உருவாக்கி எந்த அறிகுறிகளும் இல்லாத நோயாளிகளுக்காக அவற்றை தடுத்து வைத்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையில் தேஜஸ்வி சூர்யா இறங்கினார். 4065 படுக்கைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதை பதிவு செய்தவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டபோது, அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு கூட வரவில்லை என்பதை அறிந்து கொண்டனர். ஒரு நோயாளியின் பெயரால் 5 முதல் 20 படுக்கைகள் தடுத்து வைக்கப்பட்டு, பிறகு மற்ற நோயாளிகளுக்கு ஒரு பெரும் பணத்திற்கு அவை விற்கப்பட்டுள்ளன என்று சூர்யா பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்விற்குப் பிறகு மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது. அதில் அவருடன் எம்எல்ஏக்கள் ரவி சுப்பிரமணியம் மற்றும் சதீஷ் ரெட்டி ஆகியவர்கள் அதிகாரிகளை கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். அந்த வீடியோவில் தேஜஸ்வி சூர்யா சில முஸ்லிம்களை பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் எதன் அடிப்படையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து மீடியாக்களின் ஒரு பகுதி இந்த விவகாரத்தை பெரிதாக்கி இதற்கு மத ரீதியிலான சாயம் பூசி தேஜஸ்வி சூர்யா இந்த பிரச்சாரத்திற்கு மத சாயம் பூச பார்ப்பதாகவும் அதனாலேயே அவர்கள் முஸ்லிம் பெயர்களை குறிப்பிட்டதாகவும் குற்றம் சுமத்தினர்.