தமிழக அரசுக்கு 'இந்து முன்னனி' எச்சரிக்கை!
இந்துக்கள் தங்களது குல தெய்வத்திற்கும், இஷ்ட தெய்வத்திற்கும் வேண்டுதலுக்காகவோ, பக்தியின் காரணமகவோ ஆபரணங்களை வழங்குவது வழக்கம். இது இன்றல்ல…நேற்றல்ல… பல ஆயிரம் ஆண்டுகளாக இந்துக்களிடையே தொடரும் வழக்கம். இந்து ஆலயங்களின் செழிப்பே, காலங்களை கடந்து இந்து சமுதாயம் தழைத்து வளர காரணம்!
இது இந்துக்களுக்கு புரிந்ததோ இல்லையோ காலம் காலமாக இந்து விரோதிகள் தெளிவாக புரிந்துவைத்துக்கொண்டு ஆலயங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கஜினி முகமது தொடங்கி கிருஸ்தவ போர்ச்சுகீசியர்வரை இந்தியாவில் உள்ள கோயில்களை அழித்து கொள்ளையடிப்பதையே முக்கிய கடமையாக செய்துவந்தனர். கோயில்களை கொள்ளையடிப்பதன் மூலம் எக்கச்செக்க செல்வங்களை பெற முடியும். மேலும் இந்து சமுதாயத்தை வறுமைக்குள் தள்ளி, இந்து மதத்தையும் அழிக்க முடியும். இதுவே அந்த அன்னிய படையெடுப்பாளர்களின் நோக்கமாக இருந்தது.
ஆனாலும் இந்த வரலாற்றில் இருந்து இந்துக்கள் பாடம் கற்றுக்கொண்தாக தெரியவில்லை. இன்றும் அந்நியப்படையெடுப்பாளர்கள் இல்லை. ஆனால் அரசாங்கம் என்ற பெயரில் இந்துக்களின் கண் முன்னாலேயே கோயில் சொத்துக்கள் களவாடப்பட்டு வருகின்றன. தற்போது பக்தர்கள் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்த தங்கத்தைத் உருக்கி வங்கியில் போடப்போவதாக அறிவித்துள்ளார் அற(மற்ற)நிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபு!
அதன் முதற்கட்டமாக சமயபுரம் கோயில், திருவேற்காடு கோயில், இருக்கன்குடி கோயில்களில் உள்ள தங்க நகைகள் உருக்கப்படும் என்று அறிவித்துள்ளார் ஒன்றிய முதல்வர் ஸ்டாலின்.
ஆளும் கட்சியின் இந்த நடவடிக்கைக்கும், ஆபிரகாமிய காட்டுமிராண்டிக் கூட்டங்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கும் துளியும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் இந்து மதத்தில் நம்பிக்கையில்லாத அரசு எதற்காக இந்துக்களின் பிரார்த்தனை விஷயத்தில் தலையிடவேண்டும்?
இந்துக்கள் தங்களுடையை குடும்ப உறுப்பினர்களின் நலன், நேர்த்திக் கடன், உடல் ஆரோக்கியம் போன்ற பல காரணங்களுக்காக கோயில்களில் உள்ள சாமிக்கு தங்க நகைகளை வழங்கியுள்ளனர். இந்த நகைகள் அனைத்தும் கோயில்களில் உள்ள சாமிக்கே சொந்தம். வேறு யாரும் அதில் சொந்தம் கொண்டாட முடியாது. நகைகள் மட்டும் கிடையாது. கோயில் மற்றும் கோயில் சார்ந்த சொத்துக்கள் அனைத்தும் அந்தக் கடவுளுக்கே சொந்தம்.