அமெரிக்கப் போர்க்கப்பல் USS ஜான் பால் ஜோன்ஸ் லட்சத் தீவு அருகே சென்றதன் பின்னணி!
லட்சத் தீவுகளுக்கு மேற்கே 130 கடல் மைல் தொலைவில் கடந்த வாரம் அமெரிக்காவின் USS ஜான் பால் ஜோன்ஸ் போர்க்கப்பல் ஒரு சுதந்திரமான வழிசெலுத்தல் நடவடிக்கை (Freedom of navigation operation (FONOP)) மேற்கொண்ட பொழுது இந்தியாவின் மூலோபாய சமூகம் பரபரப்பானது.
அமெரிக்க கடற்படை இவ்வாறு நடந்துகொண்டது தேவையற்ற ஆத்திரமூட்டல் என்றுகூட தெரிவித்தனர். US 7வது கடற்படை தளபதியின் ஒரு செய்திக்குறிப்பில், "இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் (EEZ) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை வழிகாட்டுதல் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை வலியுறுத்தியதாக......இந்தியாவின் முன் அனுமதி கோராமல்" எனத் தெரிவித்திருந்தார். இது இந்திய-அமெரிக்க உறவுகள் உயர்ந்த நிலையில் இருக்கும் நேரத்தில் ஒரு அரசியல் சமிங்ஞையா என்று கூட பலரும் பார்த்தார்கள்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்க ராணுவத்தின் பெண்டகன், சர்வதேச சட்டங்கள் உடன் இது ஒத்துப் போவதாக வாதிட்டனர். அமெரிக்க கடற்படையை பொருத்தவரை இத்தகைய FONOPக்களை செய்வது , சில நாடுகளின் கடல் சார் உரிமைகள் சர்வதேச சட்டத்தோடு பொருந்தாது என்பதை காட்டும் வழியாக உள்ளன.
இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் வெளி நாட்டு போர்க்கப்பல்கள் வருவதற்கு இந்தியாவின் முன் அனுமதி தேவை என்பது, அமெரிக்க அதிகாரிகளை பொருத்தவரை கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் (UNCLOS) பிரிவு 56, 58 ல் ஐந்தாம் பகுதியில் விதிமீறல் ஆகும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன்படி அமெரிக்க போர்க்கப்பல்கள், மற்றொரு கடற்கரை நாட்டில் 100 கடல் மைல் தொலைவில் இருக்கும் பிரத்தியேக மண்டலங்களுக்கும் சென்று வரலாம். இந்த கடல்சார் மாநாட்டை இந்தியா வித்தியாசமாக பார்க்கிறது. மற்றொரு நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்குள் ராணுவக் கப்பல்களை அனுப்ப இந்த மாநாடு வெளிப்படையாக அனுமதிக்கவில்லை என்று இந்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
1995 இலும் இந்த மாநாட்டின் பொழுது இந்தியா, "இந்த மாநாடு மற்ற நாடுகளை அடுத்த நாடுகளின் பிரத்தியேகமான பொருளாதார மண்டலங்கள் மற்றும் கண்ட ஷெல்ப்களில் ராணுவ பயிற்சிகள் குறிப்பாக குறிப்பாக கடலோர நாட்டின் அனுமதியின்றி ஆயுதங்கள் அல்லது வெடிபொருட்களை கொண்ட போர்க்கப்பல்களை கடந்து செல்ல அங்கீகாரம் அளிக்கவில்லை" என்பதை இந்தியா புரிந்து கொள்வதாக தெரிவித்தனர். இது இந்தியாவின் உள்ளூர் கடல் மண்டலங்கள் சட்டம் 1976 உடன் ஒத்துப்போகிறது.