கொரோனவை கட்டுப்படுத்த திணறும் சீன கம்யூனிச அரசு - கொந்தளித்து போராட்டத்தில் குதித்த மக்கள்

சீனாவில் மாதக்கணக்கில் நீடிக்கும் ஊரடங்கால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-11-28 02:10 GMT

சீனாவில் மாதக்கணக்கில் நீடிக்கும் ஊரடங்கால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சீனாவில் அமலில் உள்ள கடுமையான கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்டித்து அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக முக்கிய நகரங்கள் பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கொரோனா பாதிப்பை பூஜ்ஜியம் ஆகும் நோக்கில் மாதக்கணக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, நாட்கணக்கில் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றால் மக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றன.

இந்நிலையில் ஊறுவுச்சி நகரில் கொரோனா நோயாளிகள் இருந்ததால் ஒரு சில வாயில் கதவுகள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கி உயிரிழந்த சம்பவம் அரசுக்கு எதிரான கொந்தளிப்பை மேலும் அதிகரித்துள்ளது.

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியால் கடுமையான தணிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பலர் காலி பதாகைகளுடன் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றர். இதனால் சீனாவில் பதற்றம் நிலவுகிறது.


Source - Polimer News

Similar News