பெயரை மட்டும் மாற்றி அப்படியே தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் தி.மு.க அரசு - இடதுசாரிகளை ஏமாற்றவா?
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள 'புதிய பாரத எழுத்தறிவு' திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள 'புதிய பாரத எழுத்தறிவு' திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட 'தேசிய கல்விக் கொள்கை 1986'க்கு மாற்றாக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 'புதிய தேசிய கல்விக் கொள்கை 2020'ஐ உருவாக்கியது. இந்த கல்விக் கொள்கையின் வரைவு வெளியான போதே தமிழ்நாட்டிலிருந்து இடதுசாரிகள் மத்தியில் மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் தேசிய கல்விக் கல்லூரிக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் வலம் வர துவங்கின. பிரதமர் மோடி முதல் ஆளுநர் ரவி வரை எல்லா மேடைகளிலும் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதல் தி.மு.க கூட்டணி அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறது தி.மு.க அரசு. இருந்தபோதும் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை பெயர் மாற்றி சத்தம் இல்லாமல் அமல்படுத்தி வருவதாக கருத்துக்கள் எழுந்துள்ளது. குறிப்பாக 'நான் முதல்வன்', 'இல்லம் தேடிக் கல்வியி', 'தகைசால் பள்ளி', 'எண்ணும் எழுத்தும் திட்டம்' உள்ளிட்ட தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் அம்சங்களை பெயரை மட்டும் மாற்றி தி.மு.க அரசு அமல்படுத்தியுள்ளது.
அதேபோல் இலவச மதிய உணவுத் திட்டம், காலை உணவளிக்கும் வகையில் அமல்படுத்தப்படும் அம்சம் தேசிய கல்வி கொள்கையில் இருக்கிறது! அதே போல் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும் நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முறையும் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள வயது வந்ததற்கான 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' என்ற திட்டத்தை அதே பேரில் செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.