ஷீரடி ரயில் விஷயத்தில் உண்மைக்கு புறம்பான தகவலை திட்டமிட்டு பரப்பும் கம்யூனிச எம்.பி வெங்கடேசன் - அறியாமையா அல்லது வன்மமா?
கம்யூனிச எம்.பி எந்த அளவிற்கு அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார், எந்த விஷயத்தையும் எப்படி அரைகுறை ஞானத்துடன் வெளி உலகிற்கு எடுத்து சொல்லி வருகிறார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
கம்யூனிச எம்.பி எந்த அளவிற்கு அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார், எந்த விஷயத்தையும் எப்படி அரைகுறை ஞானத்துடன் வெளி உலகிற்கு எடுத்து சொல்லி வருகிறார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
'ரயிலை தனியாருக்கு தாரை வார்த்தால் கட்டணங்கள் உயரும், சலுகைகள் பறிபோகும் என்பதன் எடுத்துக்காட்டு தான் சீரடி ரயில்' என பப்ளிசிட்டி அரசியலை தவிர செய்து பழக்கப்படாத எம்.பி.வெங்கடேசன் குற்றச்சாட்டை வைத்து தன் அறியாமையை வெளிஉலகிற்கு காண்பித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, 'ரயில் அரசின் வசமிருந்த பொழுது இருந்த கட்டணமும், தனியாரிடம் சென்ற பிறகு உள்ள கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். பக்தர்கள் சுரண்டப்படுவதை தடுக்க ரயில் தனியார் மயமாவதை தடுத்து நிறுத்துவோம்' என குறிப்பிட்டு சீரடி ரயில் அரசு கட்டணத்தையும், தனியார் கட்டணத்தையும் பதிவிட்டு தகவலை ஆராயாமல் அரைகுறை ட்வீட் செய்திருந்தார்.
அவர் வெளியிட்ட ரயில் டிக்கெட் விலையில் குறிப்பாக அரசு கட்டணம் குளிர்சாதன வசதியுடன் முதல் வகுப்பு படுக்கையுடன் உடைய கட்டணம் ரூ.8190 என குறிப்பிட்டு, தனியார் கட்டணம் குளிர்சாதன வசதியுடன் முதல் வகுப்பு படுக்கையுடன் உடைய கட்டணம் ரூ.10,000 என பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக இந்தியன் ரயில்வே அறிவித்த கட்டண விவரம், மற்றும் அந்த கட்டணத்திற்கு பயணிகளுக்கு அளிக்கும் வசதிகள், தனியார் ரயில் கட்டணம் மற்றும் அந்த கட்டணத்திற்கு அளிக்கும் பயணிகளுக்கு வசதிகள் குறித்து தகவல் சேகரித்ததில் எம்.பி வெங்கடேசனின் அறியாமை மற்றும் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லும் பிறழ்வு மனப்பாண்மை அப்பட்டமாக தெரியவந்தது.
அதாவது ஷீரடி தனியார் ரயில் வழங்கும் வசதிகள் பயணிகளுக்கு அதிகம், குறிப்பாக ரயில் பயணம் மட்டுமின்றி தாங்கும் இடம், உதவிக்கு ஆட்கள், இசையுடன் கூடிய பயணம், காப்பீட்டு தொகையுடன் கூடிய கட்டணம், சீரடியில் வி.ஐ.பி தரிசனம், உயர்தர மெனுவுடன் கூடிய உணவு வகைகள், அவசர காலத்தில் மருத்துவருடன் கூடிய மருத்துவ வசதி என பயணிகளுக்கு ஒரு நட்சத்திர விடுதி போன்ற அனுபவத்தை தனியார் ரயில் தருகிறது. அரசு ரயில் வழங்கும் கட்டணத்திற்கு நெருக்கமாக!