"திமிறி எழு, திருப்பி அடி, தி.மு.க முன்னாடி அடங்கி உட்கார்" - திருமாவளவனின் புதிய அரசியல்.
திருமாவளவன் புதிய அரசியல்.
தி.மு.க'விடம் சுவர் விளம்பரங்களில் திமிறி எழும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மண்டியிட்டாரோ என்ற பேச்சு தற்பொழுது அதிகமாக எழுந்துள்ளது.
சமீபத்தில் அரும்பாக்கத்தில் விளிம்பு நிலை மக்கள் வாழும் குடிசை பகுதி. அரசால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இங்கு அதிகமாக தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசித்து வந்தனர். அவர்களை முறையாக அப்புறப்படுத்தாமல், புறந்தள்றிவிட்டு குடிசைகளை தி.மு.க அரசு இடித்ததாக கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்த நிலையில்
தன் அரசியல் பாதையில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக காட்டிக்கொண்டு, அதன் மூலம் கூட்டம் சேர்த்து அரசியலை நடத்திகொண்டு, அதை வைத்து இன்று எம்.பி'யாக இருக்கும் திருமாவளவன் மக்களுக்காக இறங்கி போராடவில்லை. ஏனெனில் கூட்டணியில் தனது எம்.பி பதவியும், தனது கட்சி எம்.எல்.ஏ'க்களும் இருப்பதால் எங்கே பதவிகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ? எங்கே அரசியலில் பதவி இன்றி பிழைக்க முடியாதோ என பயந்து நடுங்கி தன் கூட்டணியான தி.மு.க அரசை கேட்க திராணியற்று நிற்கிறார். போதாக்குறைக்கு இவரின் கட்சி விளம்பர பேனர்கள், சுவர் விளம்பரங்களில் இவர்தான் தாழ்த்தப்பட்டவர்களின் மீட்பர் என்ற ரீதியில் பட்டம் வேறு.
சரி இப்படி தன் இன மக்களை நடுத்தெருவில் விட்டார் என கருதினால். இரு தினங்கள் முன் தி.மு.க அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்திக்கும் போது கைகட்டி, வாய் மூடாத குறையாக அமைச்சரின் எதிரே பிளாஸ்டிக் சேரில் பவ்யமாக அமர்ந்து அமைச்சரின் பேச்சை கேட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. "அடங்க மறு! அத்துமீறு! திமிறி எழு! திருப்பி அடி!" என்றெல்லாம் வீர வசனங்களை தன் கட்சியின் விளம்பரங்களில் வைத்து அதன் மூலம் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை தன் வசப்படுத்தி அதை வைத்து பதவியை பிடித்துவிட்டு அந்த பதவியை காப்பாற்ற இன்று எதிரே சோஃபா'வில் கூட அமர திராணியற்று திருமாவளவன் இருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.