தமிழின துரோகி என நிரூபித்துவிட்டீர்கள் திருமாவளவன் அவர்களே! - SG சூர்யா!
ஜல்லிக்கட்டுக்கு தடைக்கு முக்கிய காரணமாக இருந்த செளமியா ரெட்டியை ஆதரித்து திருமாவளவன் பிரசாரம்.
கூட்டணி அரசியல் ஆசையில் பிரச்சாரம் செய்ய போய் தமிழின துரோகி என திருமாவளவன் விமர்சிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற புகாரின் அடிப்படையிலும், தமிழ்நாடு ஜல்லிகட்டு நெறிமுறை சட்டம் 2009ன் கீழ், விலங்குகள் நலச்சட்டங்களுக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு மே 7-ந்தேதி போட்டி நடத்த தடைவிதித்து உத்தரவிட்டது. அதன்பின், கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்தப்படவில்லை. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை உருவாக காரணமாக இருந்த விலங்குகள் நல அமைப்புகள், உறுப்பினர்கள் எண்ணிக்கை உங்களுக்காக இதோ, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்வதற்கு மொத்தமாக 12 தொண்டு நிறுவனங்கள் ஜல்லிக்கட்டு தடைக்கு ஒன்று சேர்ந்து உழைத்துள்ளன, 5 விலங்குகள் நல அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. மேலும், தனிப்பட்ட முறையில் 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
இந்த தனிப்பட்ட முறையில் மூன்று பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த மூவரில் ஒருவரான செளமியா ரெட்டி , துணை உறுப்பினர் (இந்திய விலங்குகள் நலவாரியம்), கர்நாடாக மகிளா காங்கிரஸ் மாநிலச் செயலாளர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு முயற்சி எடுத்ததில் முக்கிய அங்கம் வகிக்கிறார். தற்பொழுது நடைபெற இருக்கும் கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் போராடிய காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டியை விசிக தலைவர் திருமாவளவன் ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இதன் காரணமாக தற்பொழுது தமிழின துரோகி என சமூகவலைத்தளத்தில் திருமாவளவன் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் நாளை ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. மே 13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் மும்பரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக பாஜக காங்கிரஸ் தங்களுடைய பல்வேறு பிரமுகர்களை களம் இறக்கி அவர்களுக்கு ஆதரவாக ஓட்டு கேட்க முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்க செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் அங்கு பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.