இதுதான் தமிழ்தாய் - முதல்வர் ஸ்டாலினுக்கு வகுப்பெடுத்த அண்ணாமலை
இப்படித்தான் இருக்க வேண்டும் தமிழ்தாய் என முதல்வர் ஸ்டாலினுக்கு பாடமெடுக்கும் விதமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்த்தாய் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இப்படித்தான் இருக்க வேண்டும் தமிழ்தாய் என முதல்வர் ஸ்டாலினுக்கு பாடமெடுக்கும் விதமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்த்தாய் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்கள் முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சந்தோஷ் நாராயணன் வரைந்த படம் ஒன்றை தமிழ்தாய் என குறிப்பிட்டு இணையத்தில் பகிர்ந்தார். இது வைரலாகி வந்தது அப்படத்தில் தலைவிரி கோலமாக, உருட்டிய விழிகளுடன், அலங்கோல தோற்றத்தில் ஆக்ரோஷமாக நடனமாடும் ஒரு மங்கையின் படத்தை 'தமிழ்தாய்' என குறிப்பிட்டு ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டிருந்தார்.
இது எங்கள் தமிழ் தாயே அல்ல தமிழ் தாயை பார்க்க வேண்டுமென்றால் மதுரையில் இருக்கும் சிலையை பாருங்கள் தமிழ் தாய் என்பவள் வணங்க வேண்டியவள், சாந்த சொரூபமாக காட்சி அளிக்கக் கூடியவர் இப்படி தலைவிரி கோலமாக ஆக்ரோஷம் நடனம் ஆடும் ஒரு மங்கையை பதிவிட்டு தமிழ் தாய் என்றால் நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும் எதிர்ப்பு குரல் கொடுத்து வந்தன.
இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் வாட்டிகனில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது குறிப்பிட்டு 'எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே' என ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த அதே படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார். அப்படி முதல்வர் ஸ்டாலின் தலைவிரி கோலமாக இருந்த படத்தை பகிர்ந்த அடுத்த சில வினாடிகளில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அழகே வடிவான தமிழ் தாயின் வடிவத்தை பகிர்ந்து 'எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே' என பதிவிட்டார்.
இந்த சாந்த சொரூபம் தான் எங்களது தமிழ்தாய் இப்படி தலைவிரிகோலமாக இருப்பது அல்ல என முதல்வர் ஸ்டாலினுக்கு வகுப்பெடுக்கும் விதமாக அண்ணாமலை பதிவிட்டது தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. பா.ஜ.க'வை சேர்ந்த சமூக வலைதள வாசிகள் 'தமிழணங்கே' என அண்ணாமலை பகிர்ந்த படத்தை இணையங்களில் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.