திருமலை தங்க கோபுர திருப்பணிகள் - பக்தர்கள் பெருமாளை பார்க்க புதிய கட்டுப்பாடுகள், எப்போது தெரியுமா?
திருமலை திருப்பதியில் கோபுரத் தங்க கவசம் புதுப்பிப்பு பனியால் திருப்பதி கோவில் இடம் மாறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதியில் கோபுரத் தங்க கவசம் புதுப்பிப்பு பனியால் திருப்பதி கோவில் இடம் மாறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் 'ஆனந்த நிலையம்' என அழைக்கப்படும் கர்ப்பகிரக கோபுரத்தின் தங்க கவசத்தை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது, இதனால் கோவில் அருகில் உள்ள இடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட உள்ளது.
திருமலை வெங்கடாஜலபதி கோவில் மூலஸ்தான கோபுரத்திற்கு பொருத்தப்பட்ட தங்க கவசம் இதுவரை ஏழு முறை மாற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த தங்க கவசத்தை மாற்றி அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தான முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக கோவில் அர்ச்சகர்கள், நிபுணர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள் உள்ளிட்டவருடன் ஆய்வு செய்து கவசத்தை மாற்றும் பணி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணி ஆறு முதல் 8 மாதங்களில் முடிக்கப்படும் என கருதப்படுகிறது. இதனையடுத்து பக்தர்கள் வழிபடுவதற்காக கோவிலுக்கு அருகில் உள்ள இடத்தில் தற்காலிக கோவில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பாலாலயம் வரும் பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது, இங்கு மூலசானத்தில் உள்ள பெருமாளின் விக்கிரகம் போன்றது மாதிரி வைக்கப்பட உள்ளது. தற்போது பெருமானின் சக்தியை ஒரு கும்பத்திற்கு மாற்றி அதுவும் தற்காலிக இடத்தில் வைக்கப்படும். கோவில் தற்காலிக இடத்திற்கு மாறினாலும் தற்போது மூலஸ்தானத்தில் வழக்கம்போல பூஜைகள் வழிபாடுகள் நடைபெறும். ஆனால் இதை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது, இது குறித்து விரைவில் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.