திருமலை பிரமோற்சவ விழா - 9 நாளும் நடக்கும் நிகழ்ச்சிகள் என்ன தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் பற்றிய தகவலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

Update: 2022-09-06 06:34 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் பற்றிய தகவலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஓர் ஆண்டுக்கு 450-க்கும் மேற்பட்ட விழாக்கள் நடக்கின்றன. அதில் முக்கிய விழாவாக கருதப்படுவது வருடாந்திர பிரமோற்சவம் இந்த பிரமோற்சவத்தின் போது நடக்கும் மிக முக்கிய நிகழ்வுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.


அதன் விவரம் பின்வருமாறு - திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வருகின்ற 27ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 5ம் தேதி வரை 9 நாட்களில் வருடாந்திர பிரமோற்சவ விழா நடக்கிறது 9 நாட்களில் நடக்கும் மெகா திருவிழாவின்போது வெங்கடாசலபதி கோவிலின் நான்கு மாத வீதிகளிலும் உலா வருவார்.


உற்சவர் மலையப்ப சாமி மொத்தம் 16 வகையான வாகனங்களில் இரண்டு தேர் உட்பட சிறப்பு அலங்காரத்தில் இந்த நாட்களில் நான்கு மாத வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.


கோவிலின் மாட வீதிகளில் கேலரிகள் அமர்ந்திருக்கும் பக்தர்கள் 'ஏடு கொண்டல வாடா! வெங்கட்ரமணா! கோவிந்தா.. கோவிந்தா..' என பக்தி கோஷம் எழுப்புவது விண்ணை முட்டுமளவிற்கு கோலாகலமாக இருக்கும்.


வருடாந்திர பிரமோற்சவம் துவங்கும் தொடக்க வாரத்தில் முந்தைய வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று வைகாசன ஆகம விதிகளின்படி வெங்கடாசலபதி கோவில் பாரம்பரிய முறையில் சுத்தம் செய்யப்படுகிறது இதற்கு 'ஆலய சுத்தி' எனப்படும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனும் அழைப்பர்.


பிரமோற்சவ விழா தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக மண் சேகரிக்கும் செயல்முறை கடைபிடிக்கப்படும் இதற்கு மிருத சங்கிரஹரணம் என்றும் அங்குரார்ப்பரணம் எனவும் கூறுவர்.


அதனை தொடர்ந்து ஒன்பது நாள் மெகா திருவிழாவில் தொடக்கத்தை குறிக்கும் கருட கொடியேற்றம் நடக்கிறது. கோவிலில் உள்ள தங்க கோடி மரத்தில் மஞ்சள் நிறத்தில் ஆன கொடியில் சிவப்பு நிறத்தில் கருடன் உருவம் வரையப்பட்டு கொடியை பிரதான அர்ச்சகர் ஏற்றுவார்.


பிரமோற்சவ விழாவில் 33 தேவர்களும், முனிவர்களும் ரிஷிகளும் அனைத்து உலக தெய்வங்களுக்கும் கருடன் அழைப்பு விடுவதாக நம்பப்படுகிறது.


கொடியேற்றம் முடிந்ததும் உற்சவர் மலையப்ப சாமி கோவில் சுற்றி நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார். ஒரு சில வாகனங்களில் உபநாச்சியர்களான ஸ்ரீதேவி, பூதவியுடன் மலையப்ப சாமி உலா வருவார்.


வீதி உலா முடிந்ததும் கோவிலுக்குள் ஸ்ரீவாரி கொலு நடத்தப்படும் பிரம்மோற்சவம் விழாவின் போது உற்சவர்களுக்கு கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் நறுமணப் பொருட்களால் ஸ்தாபன திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் நடத்தப்படும்.


பிரம்மோற்சவ விழாவில் கடைசி நாளில் உற்சவர் மலையப்ப சாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சக்கரத்தாழ்வார் உற்சவர்களுக்கு புஸ்கரணிக்கு எழுந்தருள்வார்கள் அங்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வாரி நிகழ்ச்சி நடக்கும் கோவில் மூன்று முறை சக்கரத்தாழ்வாரை புனித நீரில் மூழ்கி எடுத்து நீராட்டுவர் இதற்க்கு 'சக்கரஸ்நானம்' என பெயர்.


பிரமோற்சவம் விழா நிறைவு நாளில் கொடி இறக்கம் நடக்கும் அப்போது தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டு இருந்த கருட கோடி இறக்கப்படும். இத்துடன் 9 நாள் பிரமோற்சவ விழா வெற்றிகரமாக நிறைவடைகிறது' என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News