'கதிர் & தி கம்யூன் எழுத்துக்களால் தூக்கம் தொலைத்த நிதியமைச்சருக்கு...' - அனைவரும் முரசொலி படிப்பவர்கள் இல்லையே அமைச்சரே!
29 ஆகஸ்ட் 2022 அன்று, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தி இந்து நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரையின் படத்தை ட்வீட் செய்துள்ளார்,
29 ஆகஸ்ட் 2022 அன்று, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தி இந்து நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரையின் படத்தை ட்வீட் செய்துள்ளார், இது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 50% அதிகரித்துள்ளது என.
மேலும் அவரது ட்வீட்டில், பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யா அவர்களை குறிப்பிட்டு, பி.டி.ஆர் பற்றிய செய்தியை வெளியிடும் சில நிறுவனங்களையும் குறிவைத்து, 'எஸ்.ஜி.சூர்யா போன்ற மதவாதிகள் முட்டாள்தனமான செய்தி அட்டைகளை கதிர் & கம்யூன் போன்றவைகளில் பரப்புகிறார்கள், மேலும் அரசாங்கத்தின் மீது பழி போடுகிறார்கள்' என குறிப்பிட்டார்.
தி.மு.க அமைச்சருக்கு, தன்னால் இயலவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையும், உண்மையான தகவல்களை மூடி மறைக்கும் வழக்கமும் உள்ளது. அதன் நீட்சியாக சில திரிக்கப்பட்ட கருத்துக்களுடன் அவரின் வழக்கமான பொய் தகவல் பரப்பும் வேலையை செய்துள்ளார்.
அவர் குறிப்பிட்ட தி இந்து கட்டுரையில் இருந்த தகவலானது, 'மாநிலத்தின் சொந்த வருவாயில் மிக உயர்ந்த வளர்ச்சி மதுபானத்தின் மீதான மாநில கலால் வரியிலிருந்து கிடைத்துள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலின் பின்புலத்தில் தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க அரசு தனது மக்களுக்கு அதிக மதுபானங்களை விற்கிறது, மக்களிடம் மதுபானம் விற்று வரும் மாநில கலால் வரி 116.3% மூலம் வந்த வளர்ச்சியை தமிழகத்தின் வருமான வளர்ச்சிபோல் காண்பித்துள்ளது.
இது மட்டுமின்றி பி.டி.ஆர் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, 2021-22 நிதியாண்டில் மதுபான விற்பனை மூலம் தமிழக அரசு ₹36,013 கோடி சம்பாதித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தான் நிதியமைச்சராக இருக்கும் மாநிலம் சாராயம் விற்ற காசில் வந்த வருமானத்தை பெருமையாக ஒரு நிதியமைச்சர் கூறுகிறார் என்றால் அவரின் பொருளாதார அறிவை நினைத்து பாருங்கள்.