உலகின் பிரமிப்பான புதையல் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றாண்டு தினம் இன்று

உலகம் முழுவதும் கிடைத்த தொல்பொருள் புதல்களிலேயே மிக அதிகமான மதிப்பு கொண்ட புதைகள் தோண்டி எடுக்கப்பட்ட நூற்றாண்டு தினம் இன்று பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.அந்த பிரம்மாண்ட புதையலின் சொந்தக்காரர் எகிப்த மன்னர் டூடங்காமன்

Update: 2022-11-04 03:00 GMT

பத்து வயதில் மன்னராக பதவியேற்று 19வது வயதில் மர்மமான முறையில் மரணத்தை தழுவியவர் டூடங்காமன் 3,363 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு 1341 ஆம் ஆண்டு எகிப்து மன்னர் குடும்பத்தினர் 18 ஆவது பரம்பரையில் பிறந்தவர் டுடங்காமன் தந்தை அகனாடென் திடீரென்று மரணம் அடைந்ததால் டூடங்காமன் 10 வயதில் மன்னர் பொறுப்பு ஏற்றார். எகிப்து மன்னர் குடும்பம் வழக்கப்படி தொடர்ந்து சகோதரியை திருமணம் செய்து கொண்ட. டூடங்காமன் 19 ஆவது வயதில் கி.மு 1323 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? விபத்து அல்லது நோய்காரணமாக இருந்தாரா? என்பது இன்னும் ஆய்வில் இருக்கிறது.


மரணம் அடைபவர்களின் ஆன்மா அழியாது.அந்த ஆன்மா வேறு உடலை எடுத்துக் கொண்டு மறு உலகில் வாழும் என்று நம்பிக்கை காரணமாக எகிப்து மக்கள் மரணமடைபவர்களின் உடல்களை எரிப்பதில்லை. பல்வேறு மூலிகைகள் ரசாயன திரவங்களைக் கொண்டு இருந்தவரின் உடலை பதப்படுத்தி சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடுவார்கள். அப்படி பாதுகாக்கப்பட்ட உடல்கள் மம்மி என்று அழைக்கப்பட்டன. பழங்கால மன்னர்களின் மம்மிகள் புதைக்கப்பட்ட கல்லறைகளில் கிடைக்கும் தகவல்களை கொண்டு எகிப்தின் வரலாற்றை எழுத முயன்ற ஆய்வாளர்கள் அந்த கல்லறைகள் எங்கே இருக்கின்றன என்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள். 3500 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த பல மன்னர்கள் மற்றும் ராணிகளின் கல்லறைகள், தீப்ஸ் என்று முன்னர் அழைக்கப்பட்ட லக்சார் நகரின் பாலைவனப் பகுதியில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அங்கே மன்னர்கள் புதைக்கப்பட்ட இடம் மன்னர்களின் பள்ளத்தாக்கு என்றும், ராணிகளின் கல்லறைகள் இருந்த இடம் ராணிகளின் பள்ளத்தாக்கு,என்றும் அழைக்கப்படுகின்றன.


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹோவர்டு கார்ட்டர் என்பவர் 17 வயதில் எகிப்து நாட்டுக்குச் சென்று அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கல்லறைகளில் உள்ள கல்வெட்டு மற்றும் சித்தர் எழுத்துக்களை பதிவு செய்யும் பணியை செய்தார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கார்னர்வன் ஜார்ஜ் ஹெர்பெட் என்பவரின் பண உதவியுடன் பள்ளத்தாக்கு பகுதியில் டுடங்காமன் கல்லறையை பல ஆண்டுகளாக தேடினார். மிகச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1922 ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி டுடங்காமன் கல்லறையை கார்ட்டர் கண்டுபிடித்தார். 3300 ஆண்டுகளாக மூடி கிடந்த அந்தக் கல்லறையைத் திறந்து பார்த்தபோது அலிபாபா குகை புதையல் போல அங்கே ஏராளமான பொக்கிஷங்கள் குவிந்து கிடந்தன. மன்னர் டுடங்காமன் மம்மியும், அந்த கல்லறையில் காணப்பட்ட பெரும்பாலான பொருள்களும் தங்கத்தால் செய்யப்பட்டு மினுமினுத்தன. டுடங்காமன் சவப்பெட்டி தங்கத் தகடுகள் போர்த்தப்பட்ட இரண்டு அடுக்கு மரப்பெட்டிகளுக்குள் இருந்தது. உடல் இருந்த சவப்பெட்டி முழுவதும்110 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டு பளபளத்தது. டூடங்காமன் முகம் 10 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தால் மூடப்பட்டு இருந்தது. இது தவிர அங்கு இருந்த 5398 பொருட்களில் சிம்மாசனங்கள், செருப்பு உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானவை தங்கத்தால் செய்யப்பட்டு ஆச்சரியப்படுத்தின.


அனைவரையும் கவர்ந்த டூடங்காமன் மம்மி முககவசம் இப்போது எகிப்து நாட்டின் அடையாள சின்னம் போல போற்றப்படுகிறது.டூடங்காமன் கல்லறைப் பொக்கிஷங்கள் இவ்வளவு சிறப்பு வாய்ந்தவை என்பதால் அந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகும் இந்த நாளை எகிப்து அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடுகிறது.





Similar News