கட்சிக்காரர்கள் அட்டூழியத்தால் கழிவறை செல்ல தயங்கும் பட்டியல் இன மக்கள்!
Toilet, a distant dream in SC colony
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமராஜர் நகரில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களுக்கு கழிப்பறை கட்டித் தர வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய திறந்தவெளி பகுதியில், எங்கள் குடும்பங்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். அப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்ட் மற்றும் மார்க்கெட்களில் கழிப்பறையை பயன்படுத்த, 5 ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் பெண்கள் உள்ளனர்.
காமராஜர் நகரில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன, அவர்களில் பெரும்பாலோர் பட்டியல் சாதி சமூகங்களைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த எம்.சுரேஷ் (30) கூறுகையில், "எனது ஐந்து பேர் கொண்ட குடும்பம் சூளகிரி பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பறையை பயன்படுத்துகிறோம், ஒரு நாளைக்கு 25 ரூபாய் செலவழிக்கிறோம். தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டக் கோரி உள்ளூர் அதிகாரிகளை அணுகினேன். ஆனால் கழிப்பறைக்கு இடம் இல்லை என்று கூறிவிட்டனர். சுகாதார வளாகம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அவரரை தொடர்ந்து பேசிய ஏகாம்பரம் (53) கூறுகையில், காய்கறி சந்தையில் பெண்கள் பொதுக் கழிப்பறையை பயன்படுத்துகின்றனர், அங்கு 5 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போது அப்பகுதியில் ஒரு குளியலறை வசதி உள்ளது. அதுவும் விரைவில் பஞ்சாயத்து மூலம் இடிக்கப்படும் என்றார்.
பஸ் ஸ்டாண்டில் உள்ள சுகாதார வளாகத்தை பயன்படுத்தி, ஒப்பந்ததாரரை நியமிக்காததால், சில கட்சி பிரமுகர்கள் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்கின்றனர். இதுகுறித்து சூளகிரி பஞ்சாயத்து தலைவர் கலைசெல்வி கூறுகையில், இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது, ஆனால் காய்கறி சந்தையில் பொது கழிப்பறையை பயன்படுத்தி பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.