ஆசை வார்த்தை பேசி, அரசியல் செய்து, நடுத்தெருவில் விட்ட உதயநிதி ஸ்டாலின் - கொதிக்கும் மருத்துவ மாணவர்கள்!
எதிர்கட்சியாக இருந்த பொழுது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் கட்டண விவகாரத்தில் ஆதரவு தருகிறேன் என்ற பெயரில் அரசியல் செய்துவிட்டு எதிர்க்கட்சியான பிறகு அது பற்றி கண்டுகொள்ளாமல் உதயநிதி ஸ்டாலின் இருப்பது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர் கட்சியாக இருந்த பொழுது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் கட்டண விவகாரத்தில் ஆதரவு தருகிறேன் என்ற பெயரில் அரசியல் செய்துவிட்டு ஆளும் கட்சியான பிறகு அது பற்றி கண்டுகொள்ளாமல் உதயநிதி ஸ்டாலின் இருப்பது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணமே தங்களிடமும் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று 10-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசுடைமை ஆக்கப்பட்ட பின்பு அதன் கட்டுப்பாட்டில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது, ஆனாலும் அங்கு தொடர்ந்து தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் மாணவர்கள், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே போல் மாணவர்கள் இதே கட்டண விவகாரம் தொடர்பான போராட்டத்தில் ஈடுட்டனர்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க, ஆட்சி மாறியதும் கட்டணத்தை மாற்றுவோம் என மாணவர்களிடம் உறுதி அளித்தது. போதாக்குறைக்கு தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு வழங்கியது மட்டுமல்லாமல் தனது ட்விட்டர் பதிவில், 'சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரியாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் தனியரை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று காலவரையற்ற போராட்டத்தை தொடங்கிய நிலையில் அதை முடக்க மாணவ, மாணவிகள் மாலையிலிருந்து விடுதியில் இருந்து வெளியேற வேண்டுமென மிரட்டப்பட்டனர். நீட் தேர்வை அனுமதித்து பலரின் மருத்துவராகும் கனவை தகர்க்கும் அடிமைகள், ஏழை எளிய மாணவர்களையும் அதிக கட்டணம் வசூலித்து நெருக்கடிக்குள்ளாக்குவது வேதனை அளிக்கிறது. மாணவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதே கட்டத்தை கட்டணத்தை அரசால் நடத்தப்படும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் வசூலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'என கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் போராட்டம் நடக்கும் வேளையில் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார். அப்பொழுது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 2 மாதங்களே இருந்தது குறிப்பிடத்தக்கது.