ஸ்டாலினை விட உதயநிதிதான் அதிகம் பா.ஜ.க'வை வளர்க்கிறார் - வெளியே சொல்லமுடியாத குமுறலில் தி.மு.க'வினர்

பா.ஜ.க'வின் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் உதயநிதி பேசி வருவதாக தி.மு.க'வினர் வேதனை தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2022-12-25 03:01 GMT

பா.ஜ.க'வின் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் உதயநிதி பேசி வருவதாக தி.மு.க'வினர் வேதனை தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடந்த தேசிய கிறிஸ்மஸ் விழாவில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் 'நான் கிறிஸ்துவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்' என கூறினார்.

மேலும், 'நான் காதலித்து திருமணம் செய்தவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் தான்' எனவும் கூறினார். உதயநிதியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, பொதுவாக தி.மு.க'விற்கு மக்கள் மத்தியில் 'இந்து விரோத கட்சி' என்று பெயர் உள்ளது. இது அவ்வப்போது நடக்கும் சம்பவங்களால் வலுப்பெற்று வருகிறது.

அண்ணா கட்சி துவங்கிய காலத்தில் அதனை மாற்றுவதற்காக 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று வாக்கியத்தை முன்வைத்தார். ஆனாலும் 'இந்து விரோத கட்சி' என்ற முத்திரை மாறவே இல்லை, இது மக்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க'வின் நடவடிக்கைகளில் அவ்வப்போது இந்து விரோத செயல்பாடுகளும், இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களும் இருந்து வருவதால் அது மேலும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், 'தி.மு.க'வில் இருப்பவர்கள் 90% பேர் இந்துக்கள், தி.மு.க 'இந்து எதிர்ப்பு கட்சி' என்பது போன்ற மாயை பரப்புரை செய்யப்பட்டு வருகிறது' எனவும் குறிப்பிட்டார். இந்த நிலையில் நானும் என் மனைவியும் கிறிஸ்துவர்கள் என தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதி பேசியிருப்பது தி.மு.க'வினர் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தி.மு.க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது கடந்த சட்டசபை தேர்தலில் 15 சதவீத சிறுபான்மையினர் ஓட்டுக்கள் முழுமையாக அடைந்தும் அ.தி.மு.க கூட்டணியை விட ஆறு சதவீத ஓட்டுகள் தான் தி.மு.க'விற்கு அதிகம் கிடைத்தது, தி.மு.க எந்த அளவிற்கு சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்குதோ அந்த அளவுக்கு இந்துக்கள் ஓட்டுக்களை இழந்து வருகிறது என்பதே உண்மை.

இந்நிலையில் உதயநிதியின் பேச்சு பா.ஜ.க'விற்கு மேலும் வலு சேர்த்து வருகிறது எனவும் குறிப்பிட்டனர். மேலும் இவ்வளவு நாள் அமைச்சர் ஆக பொறுப்பில் இல்லாமல் இருந்தார் உதயநிதி, தற்போது அமைச்சராகிவிட்டபின் இதுபோன்ற பேச்சுக்கள் ரசிக்கும் படியாக இல்லை இது மக்களிடத்தில் தி.மு.க'வின் மீது மேலும் வெறுப்புணர்வை தூண்டும் எனவும் பேசியுள்ளார். கருணாநிதியே இந்த மாதிரி பேசுவதற்கு யோசிப்பார், ஆனால் உதயநிதி பேசுவது கட்சியில் உள்ள பலர் ரசிக்கவில்லை என்பது தெரிகிறது பொறுப்பான பதவிக்கு வந்த பிறகு அனைவரும் சமம் என்ற கருத்தை மட்டுமே முன்வைக்க வேண்டும் சிறுபிள்ளைத்தனமாக இதுபோன்று பேசுவதால் பா.ஜ.க இன்னும் வேகமாக வளரும் எனவும் அதிருப்தியுடன் தெரிவித்தனர்.



Source Dinamalar

Similar News