முடிவடையாத மழைநீர் வடிகால் பணிகள் - பேசி சமாளிக்கும் அமைச்சர் கே.என் நேரு, மழைக்கு தப்புமா சென்னை?

'மெட்ரோ வயர், கரண்ட் வயர், மரம் எல்லாம் இருக்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிய காலதாமதம் ஆகும்' என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-10 13:55 GMT

'மெட்ரோ வயர், கரண்ட் வயர், மரம் எல்லாம் இருக்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிய காலதாமதம் ஆகும்' என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தற்பொழுது மழைக்காலம் துவங்கிவிட்டதால் சென்னையில் ஆங்காங்கே பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் சென்னையில் மழை நீர் தேங்காாமல் இருக்க மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளின் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருவதாகவும் மழை காலங்களில் என்ன நடக்க போகிறது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் பணிகளை முடிக்க வேண்டும் என சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளின் மேற்கொள்ளப்பட்ட ஒரு மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர் வாரும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறும், '15ஆம் தேதிக்குள் எப்படி வடிகால் பணிகளை முடிக்க முடியும்? பள்ளம் தோண்டுபோது உள்ளே மெட்ரோ ஒயர், மரம், எலக்ட்ரிசிட்டி ஒயர் இருக்கிறது இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு செய்வதில் சிரமம் உள்ளது' என தெரிவித்தார்.

மேலும் 10 அடி சாலையில் 5 அடி சாலை பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஒதுங்குவதால் தான் மீட்பு பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பணிகள் எல்லாம் முழுவதுமாக நிறைவடைய ஒன்று முதல் ஒன்றரை மாதம் எடுத்துக் கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பணிகள் நிறைவடைவதற்குள் மழை நீர் வந்தால் அதை எடுப்பதற்காக முன்னேற்பாடுகள் செய்துள்ளதாகவும் சமாளித்தார் அமைச்சர் கே.என்.நேரு.


Source - News 18 Tamil Nadu

Similar News