சர்வாதிகார நாடுகளை சமாளிக்க ஜனநாயக நாடுகளிடையே ஒற்றுமை வர வேண்டிய அவசியம்.!
பல்லாண்டுகளாக உலகம் மேலைநாடுகளின் ஜனநாயக தாராளமயமான ஒழுங்கால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பொருளாதார ஒழுங்கு முறை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக ஒற்றுமை ஆகிய சில மதிப்புகளை சுற்றி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சர்வதேச ஒழுங்கை உருவாக்கினர்.
1980கள் மற்றும் 1990களில் ஜனநாயக மயமாக்கலின் மூன்றாம் அலை வீசத் தொடங்கியது. லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியாவிலும் அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் குடியரசுகள் உடைந்து ஜனநாயக நாடுகள் மற்றும் நிறுவனங்களின் பெரும் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இத்தகைய ஜனநாயக மயமாக்கல் தேக்கமடைந்துள்ளது.
பிராந்தியங்களில் சுதந்திரம், மனித உரிமைகள், அரசின் வெளிப்படைத்தன்மை, செயல்திறன், நீதி, சமத்துவம் ஆகியவை சரிவடையவும் தேக்கமடையவும் தொடங்கியது.
உலகெங்கிலும் பொய் செய்திகள், மக்களின் இடம்பெயர்வு, மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றை சமாளிக்க ஜனநாயக நாடுகள் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
2019ல் ஜனநாயக நாடுகள் இடையே மூலோபாய ஒத்துழைப்பு என்ற தலைப்பில் நடந்த ஒரு விவாதத்தில் தற்போதைய சவால்களை எதிர்கொள்ள ஜனநாயகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதித்தனர். சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியா நன்கு நிறுவப்பட்ட ஜனநாயகமாக இருந்து வருகிறது.
காலனித்துவத்திற்கு பிறகு வரும் பொருளாதாரத்திற்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், 2030ஆம் ஆண்டில் பத்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
என்றாலும் ஜனநாயகம் பெரும் அச்சத்துடன் ஒரு கடினமான கட்டத்தை கடந்து செல்கிறது என்பதை நாம் உணரவேண்டும். உலகின் சர்வாதிகார அரசாங்கங்களுக்கும் ஜனநாயகங்களுக்கும் இடையில் ஒரு புதிய போட்டி உள்ளது. இவை இங்கிலாந்து அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும்.