நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த வருட பட்ஜெட் அளித்த ஊக்கம் - ஒரு பார்வை!
2021-2022 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 அன்று இந்தியாவின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் முன்வைத்தார். இந்தக் கட்டுரை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் (ULB) கண்ணோட்டத்தில் இந்த பட்ஜெட்டை ஆராய்கிறது. இவ்வமைப்புகளின் மீது பட்ஜெட் ஏற்படுத்தும் தாக்கங்களை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
நகரங்களின் சமூக உள்கட்டமைப்புக்கு பட்ஜெட் சில மேம்பட்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. சில நகர்ப்புற சேவைகளின் விரிவாக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் இவை நேரடியாக பங்களிக்கும். முற்றிலும் நகர்ப்புறமாக இல்லாத இல்லாத துறைகளிலும் பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது. வளர்ந்து வரும் நகரமயமாக்கலின் பின்னணியில், இந்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
கோவிட் -19 தொற்றுநோயின் பின்னணியில், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு பொருந்தக்கூடிய 'பிரதம மந்திரி ஆத்மநிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனா' என்ற புதிய மத்திய நிதியுதவி திட்டத்தை பட்ஜெட் அறிவித்துள்ளது. இதற்கு ஆறு ஆண்டுகளில் 6,41,800 மில்லியன் ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் "முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார அமைப்புகளின் திறன்களை அதிகரிக்கவும், தற்போதுள்ள தேசிய நிறுவனங்களை வலுப்படுத்தவும், புதிய நிறுவனங்களை உருவாக்கவும், புதிய மற்றும் வளர்ந்து வரும் நோய்களைக் கண்டறிந்து குணப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது."
இந்த திட்டம் 11,024 நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களுக்கு ஆதரவை வழங்கும், மேலும் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் மற்றும் முக்கியமான பராமரிப்பு மருத்துவமனைகளை நிறுவுகிறது.
தவிர, நோய்களுக்கான தேசிய மையம் (NCTC), அதன் ஐந்து உள்ளூர் கிளைகள் மற்றும் 20 பெருநகர சுகாதார கண்காணிப்பு பிரிவுகள் பலப்படுத்தப்படும். ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தப்படும், WHOவின் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்திற்கான ஒரு பிராந்திய ஆராய்ச்சி தளம், உயிர் பாதுகாப்பு ஆய்வகங்கள் மற்றும் உள்ளூர் வைராலஜி நிறுவனங்கள் ஆகியவை நடைமுறைக்கு வரும்.