தமிழகத்தில் உருவான வந்தே பாரத் ரயிலில் இத்தனை வசதிகளா? - பெருமைப்பட வைக்கும் 'வந்தே பாரத்'

மோடி துவங்கி வைத்த தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம்.

Update: 2022-11-12 12:58 GMT

மோடி துவங்கி வைத்த தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் வட மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தென்னிந்தியாவிற்கான முதல் வந்தே பரத் ரயிலை நேற்று பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

மைசூர் முதல் சென்னை வரை வந்து செல்லும் இந்த ரயில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலாகும். இந்த ரயில் முழுவதும் தமிழகத்தில் தயார் செய்யப்பட்டது என்பது தமிழகத்துக்கு உள்ள பெருமையாகும்.

மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட வந்தே பாரத் ரயிலில் சேர் கார், எக்ஸிக்யூட்டிவ் கார் என இரண்டு வகுப்புகளில் 1128 இறக்கைகளுடன் 16 பெட்டிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எக்ஸிக்யூடிவ் கார் பெட்டிகளில் பயணிகள் இயற்கையை ரசித்தவாறு செல்ல இருக்கைகள் 180 டிகிரி சுழலும் வகையில் சொகுசு நாற்காலிகளாக அமைக்கப்பட்டுள்ளன. அவசர காலங்களில் ரயில் பயணிகள் ஓட்டுநர்கள் நேரடியாக தகவல்களை பரிமாறும் வகையில் டாக் பாக் வசதியுடன் கூடிய கருவி ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

வண்டியை அவசர காலத்தில் விரைந்து நிறுத்த ஏதுவாக ஒவ்வொரு பெட்டிகளிலும் எதுவாக நான்கு பொத்தான்கள் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டிலும் நான்கு கண்காணிப்பு கேமராக்கள், அவசரகால வெளியேறும் வழிகள், ரயில் எங்கு செல்கிறது கதவு எவ்வாறு திறக்கும் என்பதை பயணிகளுக்கு எளிதாக தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கிகள் எல்.சி.டி என அனைத்தையும் அமைக்கப்பட்டுள்ளது.

சூழ்நிலைக்கு ஏற்றவாறு தானியங்கி கதவுகள், பெட்டியின் வெப்பநிலைக்கு ஏற்ப தானியங்கி முறையில் வெப்பநிலையை மாற்றிக்கொள்ளும் நவீன குளிர்சாதன வசதி, மடிக்கும் தனிமையிலான இருக்கைகள் என பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மைசூர் அருகே தண்டவாளங்களில் பெரிய அளவில் தடுப்பு வேலிகள் இல்லாததால் பாதுகாப்பு கருதி 75 கிலோமீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே வாரத்தில் பயணிக்க சென்னை முதல் மைசூர் வரை சேர் கார் வகுப்பின் கட்டணமாக 1200 ரூபாயும், எக்ஸிக்யூட்டி காருடைய பயணிக்க 2015 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News