வெள்ளிமலை பாலசுப்பிரமணியன் திருக்கோவில் சர்ச்சை - சட்டப்பேரவையில் பா.ஜ.க எம்.எல்.ஏ'க்கள் வெளிநடப்பு! பின்னணி என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பாலசுப்பிரமணியன் கோவிலில் திருவிழா நடத்தப்படாமல் அலுவலக அறையை இந்து சமய அறநிலையத்துறை பூட்டி வைத்துள்ளதாகவும், காவல் துறையை வைத்து அங்குள்ளவர்களை அடித்து விரட்டியதாகவும் சட்டப்பேரவையில் பா.ஜ.க எம்.எல்.ஏ'க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-05-07 12:30 GMT

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பாலசுப்பிரமணியன் கோவிலில் திருவிழா நடத்தப்படாமல் அலுவலக அறையை இந்து சமய அறநிலையத்துறை பூட்டி வைத்துள்ளதாகவும், காவல் துறையை வைத்து அங்குள்ளவர்களை அடித்து விரட்டியதாகவும் சட்டப்பேரவையில் பா.ஜ.க எம்.எல்.ஏ'க்கள் வெளிநடப்பு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் வெள்ளிமலை முருகன் கோயில் மிக பிரசித்தம் அங்கு ஓர் ஆசிரமம் உள்ளது, ஆசிரமத்தின் தற்போதைய நிர்வாகி சுவாமி சைதன்யாநந்தா. மாணவப் பருவத்தில் நெருக்கடி நிலையை எதிர்த்துப் பணியாற்றியவர்.

பட்டப் படிப்பு முடித்த பிறகு சுவாமி சைதன்யாநந்தர், தன்னை ஸ்ரீ விவேகானந்தா ஆசிரமத்தில் இணைத்துக் கொண்டார். 1998ம் ஆண்டு முதல், ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார்.

இவ்வாறு ஒரு வரலாற்றை கொண்டதுஆசிரம மண்டபம் இன்று அறநிலையதுறையால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நடத்தாமல் அறநிலையத்துறை புறக்கணிக்கிறது எனவும் இந்த விவகாரத்தை கண்டித்து தமிழக பா.ஜ.க எம்.எல்.ஏ'க்கள் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்தபின் பா.ஜ.க எம்.எல்.ஏ காந்தி அவர்கள் கூறியது, கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பாலசுப்பிரமணியன் கோவிலில் திருவிழா நடத்தப்படாமல் அலுவலக அறையை இந்து சமய அறநிலையத்துறை பூட்டி வைத்துள்ளதாகவும், காவல் துறையை வைத்து அங்குள்ளவர்களை அடித்து விரட்டியதாகவும் கூறினார். 

Image Source - Polimer

Similar News