விஸ்வரூபம் எடுக்கும் மதுரை போலி பாஸ்போர்ட் விவகாரம் இதன் பின்னணி என்ன?

மதுரையில் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் 200 போலி பாஸ்போர்ட் வழங்கிய வழக்கை சி.பி.ஐ, என்.இ.ஏ விசாரிக்க அண்ணாமலை அனுப்பியிருக்கும் புகார் கடிதம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-07-15 05:45 GMT

மதுரையில் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் 200 போலி பாஸ்போர்ட் வழங்கிய வழக்கை சி.பி.ஐ, என்.இ.ஏ விசாரிக்க உத்தரவிட கோரி தமிழ்நாடு ஆளுநருக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அனுப்பியிருக்கும் புகார் கடிதம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அதிலும் குறிப்பாக உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை குறிப்பிட்டு குற்றம் சாட்டி இருப்பது கூடுதல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்ணாமலை தமிழக ஆளுநருக்கு அனுப்பிய புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'தமிழ்நாடு உள்துறை தலைவராக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம் 2018 மதுரை மாநகர கமிஷனராக பொறுப்பேற்ற 13 மாதங்களுக்குப் பிறகு திருச்சியில் இருந்து இலங்கைக்கு சென்ற ஒருவரின் பாஸ்போர்ட் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல போலி பாஸ்போர்ட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன இவை எல்லாம் போலி ஆவணங்கள் மூலம் மதுரையில் பெறப்பட்ட பாஸ்போர்ட் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் கியூ பிரிவு விசாரணையில் போலி பாஸ்போர்ட் வழங்கியதில் மதுரை மாநகர காவல் துறை அதிகாரிகள், பாஸ்போர்ட் அதிகாரிகள், தபால் துறை என்று சம்பந்தப்பட்டிருக்கும் என்ற பகீர் உண்மைகள் வெளியாகின.

இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என மதுரை உச்சநீதிமன்றம் விசாரித்த பொழுது இந்த வழக்கில் 175 சாத்திய சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டதாகவும் 22 பேர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதாகவும், காவல்துறையை சேர்ந்த மூன்று பேர் பாஸ்போர்ட் அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டதாகவும் 2020-21 ஜனவரி தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க கியூ பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் பாஸ்போர்ட் தபால் துறை அதிகாரிகளை விசாரிக்க கடிதம் அனுப்பிய தற்போதைய குழு பிரிவு டி.ஐ.ஜி ஈஸ்வரமூர்த்தி, ஆவணியாபுரம் இன்ஸ்பெக்டர் இளவரசு, ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், ஐ.எஸ் உதவி கமிஷனர் சிவக்குமார், மதுரை கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என அப்போதைய டி.ஜி.பி'க்கு கடிதம் எழுதினார்.

நீதிமன்றம் உத்தரவிட்டு ஒன்றை ஆண்டுகளாகியும் இந்த முக்கியமான வழக்கில் விசாரணை நடக்கவில்லை உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதத்தால் வழக்கு விசாரணை தாமதம் செய்யப்படுகிறது.

மேலும் இந்த போலி பாஸ்போர்ட் வழக்கை சி.பி.ஐ மற்றும் என்.இ.ஏ விசாரணைக்கு உத்தரப்பட வேண்டும்' என ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா புகார் அனுப்பப்படும் எனவும் கூறியுள்ளார்.

இந்திய பாதுகாப்பிற்கு வேட்டு வைக்கும் இந்த விவகாரம் தற்போது அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் தமிழக அரசின் நிர்வாக ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - Junior Vikatan

Similar News