இந்த அறிக்கை யாரையும் திருப்திப்படுத்தவில்லை. இந்த விஷயத்தில் நாம் உண்மையை தெரிந்து கொள்வோமா என்பது சாத்தியமும் இல்லை. இன்னும் அதிகமாக விசாரணைகள் நடக்கும் என உறுதிகள் தரப்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் நடப்பதற்கும் வாய்ப்பில்லை. இதற்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டிய உலகம் தற்பொழுது இந்த அரசியல் காரணமாக பிளவு பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆரம்பத்திலிருந்தே சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஏற்கனவே நடந்து கொண்டிருந்த வர்த்தக பிரச்சினை. இந்த வைரஸ் பிரச்சினையால் பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது. உலக சுகாதார மையம் (WHO) கடும் நெருக்கடிக்கு உள்ளானது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது ஒரு விசாரணையா என்பது கூட அவ்வளவாக யாரும் நம்பவில்லை. ஆனால் இது ஒரு விஞ்ஞான கூட்டு ஆய்வு என்று சீனர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதாவது இது முற்றிலும் உலக சுகாதார மையம் எழுதிய அறிக்கை அல்ல ஆனால் உலக சுகாதார மையத்தினால் நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் 17 சீன விஞ்ஞானிகள் அடங்கிய கூட்டு எழுதியது. இந்த குழுவிற்கு நான்கு வார கால அவகாசம் இருந்தது. இந்த விளக்கத்தை சீனாவிற்கு எப்பொழுதும் ஆதரவளிப்பதாக கருதப்படும் உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் சீனாவை விமர்சித்துள்ளார்.
2019 டிசம்பர் 8ஆம் தேதி தான் வழக்குகள் கண்டறியப்பட்டதாக குழுக்கள் தெரிவித்தாலும், விஞ்ஞானிகளுக்கு குறைந்தபட்சம் செப்டம்பர்-2019 முதல் உயிரியல் மாதிரி தரவு உட்பட முழுமையாக தரவேண்டும் என்று அவர் கூறினார். இதில் உள்ள சிக்கல்களையும் அவர் வெளிப்படுத்தினார். இந்த குழு ஆய்வக விபத்தின் விளைவாக வைரஸ் உருவானது என்ற சாத்தியத்தை மறுத்தாலும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் இந்த மதிப்பீடு போதுமானதாக இல்லை என்றும் வலுவான முடிவுகளுக்கு இன்னும் கூடுதல் தரவு தேவை என்றும் குறிப்பிட்டார்.
சிக்கலான இந்த ஆய்வின் மேற்பரப்பை மட்டுமே தாங்கள் தொட்டு உள்ளதாகவும் இன்னும் ஆராய்ச்சி செய்ய எவ்வளவோ இருப்பதாகவும் தெரிவித்தார். 2019 அக்டோபரில் நடந்த ஏழாவது உலக ராணுவ விளையாட்டுகளின் மூலம் அமெரிக்காவில் இருந்து இந்த வைரஸ் வந்தது என்று சீனா குறித்த குற்றச்சாட்டையும் இந்த குழு ஆய்வு செய்தது.
ஆனால் அந்த விளையாட்டுக்காக நடத்தப்பட்ட கிளினிக்குகளில் covid-19 ஒத்த எதுவும் காணப்படவில்லை என உறுதி செய்யப்படுகிறது. மேலும் இந்த அறிக்கை 4 கோட்பாடுகளை கருத்தில் கொண்டது. இதில் அதிகமாக உறுதிசெய்யப்படும் மிகவும் சாத்தியமான ஒரு கருத்து என்னவென்றால் வுஹானில் ஒரு சந்தைக்குச் சென்ற மக்களிடம் இந்த வைரஸ் ஒரு இடைநிலை இனத்தின் வழியாக மக்களிடம் சென்று சேர்ந்தது.
இரண்டாவது, வைரஸ்களிடமிருந்து வொவால்களிடமிருந்து மக்களுக்கு வந்தது. ஆனால் வவ்வால்கள் மாதிரியில் இந்த வைரஸை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அறிக்கை கூறுகிறது. மூன்றாவது, வைரஸ்களை ஆய்வு செய்யும் ஆய்வகத்தில் இந்த வைரஸ் தற்செயலாக வெளியிடப்பட்டது.
ஆனால் இது மிகவும் சாத்தியமில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நான்காவது, உறைந்த (frozen) உணவு வழியாக வந்துள்ளது. சீனா இதுதான் காரணம் என அதிகம் வாதிடுகிறது. இது சாத்தியமானது என்று அறிக்கை கூறுகிறது. அதனால் அதிக விசாரணை தேவை.
உலக சுகாதார மையத்தின் குழுவிற்கு தரவுகளும், அணுகலும் வழங்குவதில் சீனா மிகுந்த தயக்கம் காட்டுகிறது. இதனால் ஆழமான மற்றும் விரிவான விசாரணைகளை நடத்துவது சாத்தியம் இல்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியா, கனடா, நார்வே, ஜப்பான் இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் வரையிலான அமெரிக்காவின் அனைத்து நெருங்கிய நட்பு நாடுகளும் 14 அறிக்கைகள் கொண்ட ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில், முழுமையான அசல் தரவு மற்றும் மாதிரிகள் கிடைக்கவில்லை என்றும் இது உண்மையை அறியும் முயற்சிகளுக்கு எதிராக சென்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த அறிக்கையில் பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து ஆகியவை கையெழுத்திடவில்லை.
சீன அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், ஒரு சில நாடுகள் உலக சுகாதார மையத்தின் முயற்சியை மறுப்பதாக குற்றம்சாட்டினார். சீனாவில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு பதிலாக பல நாடுகளிலும் இந்த தோற்றத்தை கண்டுபிடிக்கும் வேலையின் அவசியத்தை உணர வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
ஒரு மிகப் பெரிய நிகழ்வாக அமெரிக்கா ஜூலை 2020 இல் உலக சுகாதார மையத்தில் இருந்து விலகியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தற்போது பதவி ஏற்றிருக்கும் பிடென் நிர்வாகத்தின் முதல் நடவடிக்கைகளில், அமெரிக்கா மீண்டும் அந்த அமைப்பில் சேர இருக்கிறது.
விஞ்ஞான சமூகம் வைரஸின் தோற்றத்தைக் கண்டறிய போராடும். ஆனால் அரசியல் மட்டத்தில் இது வேறு மாதிரியாக செல்லும். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவிற்கு எதிராக அணிதிரள இது ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளது. தற்போது நடந்த QUAD உச்சி மாநாட்டின் மையப் பகுதியிலும், கொரானா வைரஸ் கையாள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதம் செய்யப்பட்டது.
அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கான உற்பத்தி தளமாக இந்தியாவை பயன்படுத்துவதற்கான அதன் திட்டத்தின் செயல்முறைக்கு ஜப்பான் நிதி அளிப்பது ஆகியவை மிகவும் ஊக்கம் அளிக்கும் ஒன்றாகும். இதனால் அமெரிக்கா-சீன சண்டையில் இருபுறமும் சேராத பிராந்திய நாடுகளிடையே சமமான போட்டி நிலவ வழிவகுக்கிறது.