10 ஆண்டுகள் எதிர்கட்சியாக தி.மு.க உருட்டிய 'மதுவிலக்கு' ஆட்சிக்கு வந்த பிறகு அடங்கியது ஏன்?

10 ஆண்டுகள் எதிர்கட்சி தி.மு.க உருட்டிய 'மதுவிலக்கு' உருட்டுகள்.

Update: 2022-12-28 03:40 GMT

2011ம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மதுவிலக்கு தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றெல்லாம் பல்வேறு புரலிகளை கிளப்பி விட்டார்கள். குறிப்பாக தமிழகத்தில் மகளிர்களின் ஓட்டுகளை அதிகமாக சேர்ப்பதற்கு, அவர்கள் கையில் எடுத்த ஒரே ஆயுதம் தான் இந்த மதுவிலக்கு. கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தவரை மதுவிலக்கு, மதுவிலக்கு தமிழகத்திற்கு வேண்டும் மதுவிலக்கு என்று கூறியவர்கள் தற்பொழுது ஆளும் கட்சியாக மாறிய பிறகு மதுவிலக்கு பற்றி வாயை திறக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?டாஸ்மாக் கடைகள் அதிக எண்ணக்கையில் லாபம் தருவது, தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு டாஸ்மாக் மூலம் தான் வருகிறது. ஏனெனில் இதனால் தான் தி.மு.க அரசாங்கம் மதுவிலக்கு பற்றி, தற்போது வரை எந்த ஒரு பதிலும் கூறாமல் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கை நவீன முறைப்படுத்தி எலைட் பார்(Elite Bar) என்ற புதிய முறையும் புகுத்தி இருக்கிறார்கள்.


கடந்த 10 ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருந்து தி.மு.க மதுவிலக்கு பற்றி உருட்டிய உருட்டுகள் உங்களுக்காக இதோ, 1948 ஆம் ஆண்டிலிருந்து 23 ஆன்டுகளாக தமிழகத்தில் நடைமுறையிலிருந்த முழு மதுவிலக்கை, 1971 ஆம் ஆண்டு கலைஞர் ரத்து செய்தது தான் தமிழகத்தின் இன்றைய அவல நிலைக்கு அற்புதமான மூல காரணமாகும். மது என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு தலைமுறை வளர்ந்த நிலையில், அவர்களை மதுவலையில் வீழ்த்தி சிதைத்த பாவம் கருணாநிதியையே சாரும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.


1. எதிர்க்கட்சியாக இருந்து கலைஞர் மதுவிலக்கு பற்றிய கூறிய கருத்து:(20.07.2015) 

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


2.  எதிர்க்கட்சியாக இருந்த பொழுது கனிமொழி கூறிய கருத்து:(07.05.2020) 

அ.தி.மு.க ஆட்சியில் இருந்த பொழுது எதிர்க்கட்சியாக இருந்த போது, தி.மு.க சார்பில் கனிமொழி அவர்கள் மக்களைப் பற்றி சிந்திக்காமல் மதுக்கடைகளைப் பற்றி சிந்திக்கும் எடப்பாடி அரசுக்கு எதிராக எதிர்ப்புகளை தெரிவித்தார். குறிப்பாக அவர் பயன்படுத்திய வசனம், "குடியை கெடுக்கும் அ.தி.மு.க; குடிக்கெடுக்கும் எடப்பாடி" என்றெல்லாம் வசனத்தை எடுத்துரைத்தார்.


3. எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மு.க.ஸ்டாலின் கூறிய கருத்து: (24.04.2016) 

எதிர்க்கட்சியாக இருந்த பொழுது, மதுவிலக்கு பற்றி பேச தகுதியற்றவர் ஜெயலலிதா என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார்.


4. எதிர்க்கட்சியாக இருந்த பொழுது உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து: (02.02.2019) 

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்து இருந்தார்.


இப்படி எதிர்க்கட்சியாக இருந்த பொழுது தி.மு.க மதுவிலக்கு தமிழகத்திற்கு நிச்சயம் வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தது. ஆனால் தற்பொழுது ஆளும் கட்சியாக மாறி 18 மாதங்கள் கடந்துவிட்டது. 2021 மே, 7 ஆம் தேதி தி.மு.க தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. ஆனால் ஆட்சியை கைப்பற்றி 18 மாதங்கள் ஆகியும் தமிழகத்தில் தங்கள் வாக்குறுதியான மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்? தாங்கள் சொன்னதற்கு மாறாக, தற்பொழுது படிப்படியாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது தி.மு.க.


எதிர்க்கட்சி எங்கே மதுவிலக்கு என்ற கோரிக்கையை முன்வைப்பார்களோ? என்று யோசித்து, அவர்களை திசை திருப்புவதற்காக தற்பொழுது அண்ணாமலையின் வாட்ச், சமூக நீதி, ஹிந்தி திணிப்பு போராட்டம் போன்ற பல்வேறு பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்துகிறார்கள். தி.மு.க எத்தனை உருட்டுகளை உருட்டினாலும் தமிழக மக்களுக்கு தற்போது தேவைப்படுவது மதுவிலக்கு மட்டும் தான்! அதை எப்பொழுது அமல் படுத்துவது??? 

Tags:    

Similar News