செப்டம்பர் 5-ஆம் தேதியை ஆசிரியர் தினமாக ஏன் கொண்டாடுகிறோம்?

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம் ஆசிரியர் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது

Update: 2022-09-05 06:15 GMT

ஆசிரியர் தினமானது சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவரான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் என்பவர் கல்வியை மட்டும் கற்பிப்பவர் அல்ல. கல்வியோடு சேர்ந்து மாணவர்களுக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நற்பண்பு, ஆற்றல் போன்ற பலவற்றையும் கற்பிப்பவர் தான் ஆசிரியர்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி வீராசாமிக்கும் சீதம்மாவுக்கும் மகனாக பிறந்தார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இவர் திருத்தணி அருகே உள்ள சர்வப்பள்ளி என்னும் ஊரில் ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

இவர் தொடக்கப் பள்ளியை திருவள்ளூரில் கௌடி என்ற இடத்தில் படித்தார். உயர்நிலைக் கல்வியை திருப்பதியில் உள்ள லூத்தரன் மிஷன் என்ற பள்ளியிலும் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பை சென்னையில் உள்ள கிறிஸ்துவ கல்லூரியில் படித்து முடித்தார்.

உதவித்தொகை மூலமாகவே இவருடைய கல்வியை தொடர்ந்தார். இவர் தனது கல்வியை முடித்த பிறகு சென்னையிலுள்ள பிரிசிடென்சி கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார். மாணவர்களிடையே ஒரு சிறந்த ஆசிரியராக இருந்த வந்தார்.

இவர் பல புகழ்பெற்ற தத்துவ ஞானியாகவும், அரசியல்வாதியாகவும் ,ஆசிரியராகவும் துணை குடியரசுத் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் ஒரு நல்ல மனிதராகவும் மாணவர்களிடையே பிடித்த ஒரு ஆசிரியராகவும் இருந்துள்ளார். கல்லை சிற்பி செதுக்குவது போல மாணவர்களை ஆசிரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி சிறப்பான மாணவர்களாக உருவாக்கி வருகிறார்கள். ஒரு ஆசிரியராக பணிபுரிந்து மாணவர்களிடையே விரும்பத்தக்க ஆசிரியராக இருந்து துணை குடியரசுத் தலைவராக உயர்ந்த காரணத்தினால்தான் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.



Similar News