பாகிஸ்தான் ஆதரவு 'காலிஸ்தான்' திட்டம் இம்முறையும் ஏன் பலிக்காது? ஓர் அலசல்!

பாகிஸ்தான் ஆதரவு 'காலிஸ்தான்' திட்டம் இம்முறையும் ஏன் பலிக்காது? ஓர் அலசல்!

Update: 2021-02-02 07:44 GMT

இந்தியாவில் ஏற்கனவே ஒழிக்கப்பட்ட காலிஸ்தான் சீக்கிய கிளர்ச்சியை புதுப்பிக்க பாகிஸ்தான் தீவிர முயற்சி செய்கிறதா? 

ஜனவரி 26 ம் தேதி குடியரசு தின விழா அன்று நடந்த விவசாய டிராக்டர் பேரணியின் போது புது டெல்லியில் நடந்த வன்முறை கலவரத்தில், காலிஸ்தான் இயக்கத்தின் சில உறுப்பினர்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தனர் என்று இந்திய அதிகாரிகள் தற்போது  உறுதியாக நம்புகின்றனர்.

அவர்களுடைய கணிப்பு இறுதியில் சரியானவை என நிரூபிக்கப்பட்டால், இதன் குறிப்பிடத்தக்க அளவு பங்கு பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவுக்குச் செல்லும்.

1992 வாக்கில் இந்திய பாதுகாப்புப் படையினரால் முற்றிலும் ஒழிக்கப்பட்ட பல்வேறு காலிஸ்தானிய குழுக்களை புதுப்பிப்பதற்கான முயற்சிகளில் ஜெனரல் பஜ்வா ஈடுபட்டு வருவதாக வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகின்றனர். காலிஸ்தான் ஆதரவை வெளிநாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவிலும் உயிருடன் வைத்திருக்க பாகிஸ்தான் உளவுத்துறை ISI பெருமுயற்சி செய்து வருகிறது.  

கனடா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ஏற்கனவே குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் புலம்பெயர்ந்த காலிஸ்தானிய ஆதரவு சீக்கியர்கள் உள்ளனர். ஆனால்  பஞ்சாபிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கொண்டு பஜ்வா இத்தாலியில் ஒரு வலுவான காலிஸ்தானிய குழுவை உருவாக்கியுள்ளார். 

பத்திரிகையாளரும்  தெற்காசிய நிபுணருமான பிரான்செஸ்கா மரினோ இது குறித்துக் கூறுகையில், சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஏஜெண்ட்களின் உதவியுடன் இத்தாலிக்குள் நுழையும் சீக்கியர்களிடையே 'சீக்கியர்களுக்கான நீதி' அமைப்பின் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பன்னு மூலம், ISI வன்முறை குணத்தை ஊக்குவிப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.  இதனால் அங்கு வசிக்கும் கிட்டத்தட்ட 70,000 சீக்கியர்கள் இந்தியாவுக்கு எதிராகவும், அங்குள்ள இந்தியத் தூதரகம் மேல் தாக்குதல் நடத்தும் அளவுக்கும் சென்றுள்ளனர். 

ஜனவரி 25 அன்று, அவர்கள் இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள இந்திய தூதரகத்தை சூறையாடினர். இரவில் "காலிஸ்தானின் கொடிகளை" எழுப்பினர், சுவர்களில் "காலிஸ்தான் ஜிந்தாபாத்" என்று எழுதினர். தூதுவர்கள்  உட்பட இந்தியர்களின் பாதுகாப்பு இத்தாலி அரசாங்கத்தின் பொறுப்பு என்று கோரி இந்தியா இத்தாலியிடம்  எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 

ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக அறிஞர்கள்  “சீக்கிய கிளர்ச்சி” குறித்த சமீபத்திய ஆய்வில், காலிஸ்தானி இயக்கத்தை முடிந்தவரை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் ஜெனரல் பஜ்வாவின் பங்கை நிரூபித்துள்ளனர்.

கடந்த பத்தாண்டுகளில் நடந்த காலிஸ்தானி பயங்கரவாத சம்பவங்களின் புதிய தரவுத்தொகுப்பை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தத் தகவல்கள் காலிஸ்தானிய பயங்கரவாதம்  புத்துயிர் பெறுவதை நிரூபிக்கின்றன. ISI, காலிஸ்தானி தீவிரவாதிகள், காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இடையே தொடர்புகளை உருவாக்கியுள்ளது.

காலிஸ்தான் இயக்கத்தின் மறுமலர்ச்சி, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போல இந்தியாவின் மீது நிழல் போர் தொடுக்கும் பாக்கிஸ்தானின் தந்திரத்தின் ஒரு பகுதியாகும்.

அவர்களின் ஆய்வில் இருந்து சில குறிப்பிடத்தக்க கருத்துக்கள்  வெளிவருகின்றன: மறைந்த தீவிரவாதத் தலைவர் பிந்த்ரான்வாலே படம் பொறித்த  டி-ஷர்ட்கள், சுவரொட்டிகள் மற்றும் பிற சாதனங்கள் இந்தியாவின் பல்வேறு குருத்வாராக்களைச் சுற்றியுள்ள கடைகளில் கிடைக்கின்றன. (சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயில் உட்பட) மற்றும் பிந்த்ரான்வாலின் புகைப்படம் பல குருத்வாராக்களுக்குள் சீக்கிய வரலாற்று தியாகிகள் பலருடன் இணைக்கப்பட்டுள்ளது. 

முறையான கணக்கெடுப்பு இல்லாமல், எத்தனை குருத்வாராக்களில் இப்படி இந்தத் தீவிரவாதியின் படம் உள்ளது என்பதை அறிய வாய்ப்பில்லை. உண்மையில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவுக்குள் பல டஜன் காலிஸ்தானி தாக்குதல்கள் நடந்துள்ளன, மேலும் பல பாதுகாப்பு படையினரால் தடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த இளைஞர்களை சேர்க்கவும், அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கவும் காலிஸ்தானிய அமைப்புகளுக்கு ISI உதவுகிறது. இந்திய அதிகாரிகள், 80 கிலோ எடை தாங்கக்கூடிய சீன ஹெக்ஸாக்கோப்டர்களை  சர்வதேச எல்லைகளில் கைப்பற்றினர்.

2020 ஜனவரியில், ட்ரோன் ஆபரேட்டர் உட்பட ஒரு இந்திய ராணுவ வீரர் மற்றும் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தலுக்காக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 2-3 கி.மீ தூரத்தில் ட்ரோன்களை ஏவுகின்ற கும்பலின் ஒரு பகுதியாக அவர்கள் இருந்தனர். "ட்ரோன் பேட்டரிகள், தனிப்பயனாக்கப்பட்ட ட்ரோன் கொள்கலன்கள், இரண்டு வாக்கி-டாக்கி செட், ரூ .6.22 லட்சம் மற்றும் ஒரு இன்சாஸ் துப்பாக்கி மகசின்" ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இரண்டாவதாக, 2019 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட கர்தார்பூர் தாழ்வாரம், ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் கனவுத் திட்டம் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

1991 முதல் பல மத்திய மந்திரி பதவிகளை வகித்த  நீண்டகால அரசியல்வாதியான ஷேக் ரஷீத், “ கர்தார்பூர் தாழ்வாரம் மூலம் ஜெனரல் பஜ்வாவால் உருவாக்கும் காயத்தை இந்தியா எப்போதும் நினைவில் வைத்திருக்கும்" என்றார். 

மூன்றாவதாக, இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தயாபா மற்றும் கர்தார்பூர் தாழ்வாரச் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த உறுப்பினர்களாக இருந்த முக்கிய காலிஸ்தானிய உறுப்பினர்கள் இடையே தீவிரமான ஒத்துழைப்பை நிரூபிக்க ஏராளமான சான்றுகள் உள்ளன. பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பர்பந்தக் குழுவின் பொதுச் செயலாளர் கோபால் சிங் சாவ்லா, லஷ்கர்-இ-தயாபா தலைவர் ஹபீஸ் சயீதுக்கு மிகவும் நெருக்கமானவர்.

நான்காவதாக ஒரு தனி சீக்கிய நாடு இந்தியாவில் இருந்து பெற  (காலிஸ்தான்) உலகின் எல்லா இடங்களிலும் சீக்கியர்களின் வாக்கெடுப்பை நடத்துவதாகக் கூறும் "நீதிக்காக சீக்கியர்கள்" அமைப்புக்கு ஐ.எஸ்.ஐ தீவிரமாக உதவுகிறது.

"ஆயிரம் வெட்டுக்களால் இந்தியாவை பிளப்பது" என்ற பாகிஸ்தானின் திட்டத்தில் காலிஸ்தான் ஒரு முக்கிய அங்கமாகும். 1971 பாகிஸ்தான் தோல்விக்கு பிறகு இது ராணுவக் கோட்பாட்டின் ஒரு அங்கமாகியது. காலிஸ்தானியர்கள் மீட்டெடுக்க விரும்பும் புகழ்பெற்ற சீக்கிய ஆட்சியாளர் ரஞ்சித் சிங்கின் பேரரசின் தலைநகரம் லாகூர் ஆகும்.

ஆனால், இறுதியில் ஜெனரல் பஜ்வா காலிஸ்தானை நிஜமாக்குவதில் உண்மையான வெற்றியைப் பெறுவாரா? இல்லவே இல்லை.

முதலாவதாக, இவரின்  நடவடிக்கைகள் அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து ஆதரவு பெறாது.  சீக்கியர்களுக்கு வெளிநாடுகளில் அவர்களின் எண்ணிக்கை, செல்வம் பொறுத்து கிடைக்கும்  அரசியல் ஆதரவு, ஒரு காலிஸ்தானின் கோரிக்கைக்கு ஆதரவாக சமன் செய்யப்படக்கூடாது.

சீக்கிய தலைவர் ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவினை தனது ஆட்சிக்கு முக்கியமாக நம்பியிருந்தாலும் கூட, கனடா பிரதமர் ட்ரூடோவின் சிறுபான்மை அரசாங்கம் காலிஸ்தானுக்கு முன்மொழியப்பட்ட வாக்கெடுப்பை தடை செய்துள்ளது. காலிஸ்தான் என்ற கற்பனை நாட்டுக்காக இந்தியாவை அவர்கள் விலக்க முடியாது. 

1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் முற்பகுதியிலும் காலிஸ்தான்-கிளர்ச்சி உச்சத்தில் இருந்தபோது CIA  ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் காலிஸ்தான் ஏன் நிஜமாகாது என்று கூறியது. அப்போது கொடுக்கப்பட்ட வாதங்கள் இன்றும் பொருத்தமானவை. அவற்றில் இரண்டு  குறிப்பிடத்தக்கவை.

பஞ்சாபில், சீக்கியர்கள் கிட்டத்தட்ட 60 சதவீத மக்கள். பின்னர் காலிஸ்தானியர்கள் சீக்கியர்கள் அல்லாதவர்களை பஞ்சாப் மாநிலத்திலிருந்து பெருமளவில் வெளியேற்ற கொலை செய்து அச்சுறுத்த முயன்றனர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் சீக்கியர்கள் குடியேற ஊக்குவித்தனர் (பஞ்சாபி அல்லாத சீக்கியர்களில் பெரும்பான்மையானவர்கள் டெல்லி மற்றும் ஹரியானாவில் குடியேறினர்). ஆனால் அது அப்போதே நடக்கவில்லை, இப்போது நடக்கும் என்று நினைப்பது அபத்தமானது.

உண்மையில், கடந்த பல ஆண்டுகளாக, சீக்கியர்கள் இந்தியா ஒரு வலுவான ஜனநாயகம் என்பதை உணர்ந்துள்ளனர், ஒரு சீக்கியர் நாட்டின் பிரதமராகி 10 ஆண்டுகள் வரை இந்த பதவியை வகித்துள்ளார். சீக்கியர்கள் இந்திய இராணுவத்தில் உயர் பதவிகளைத் தொடர்கின்றனர், மேலும் நாட்டின் மிக வெற்றிகரமான வணிகத் தலைவர்களில் சிலர் சீக்கியர்களாக உள்ளனர். 

இரண்டாவதாக, சீக்கியர்களுக்குள் உள்ள வேறுபாடுகள் எப்போதுமே ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன - ராஜ்புத் (உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் வெற்றிகரமான வணிகர்கள், பனியாஸ் (நகர்ப்புற வணிகர்கள்), ஜாட் (விவசாயிகள்) மற்றும் தலித்துகள் (ஒப்பீட்டளவில் ஏழை மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள்). வெளிநாடுகளில் குடியேறியவர்களில் பெரும்பாலோர் , காலிஸ்தானிய தலைமை அடிப்படையாகக் கொண்டவை, ஜாட் அல்லாதவை. ஆனால், விவசாயத்தை கையாளும் ஜாட்கள் தான், பஞ்சாபில் சீக்கிய அரசியல் தலைமையின் பெரும்பகுதியைக் கொண்டவர்கள்.

எனவே, பஞ்சாபில் உள்ள அரசியல் தலைமை (அது காங்கிரசாக இருந்தாலும் சரி, அகாலிதளமாக இருந்தாலும்) மோடியின் விவசாய சீர்திருத்தங்களுக்கு எதிராக வலுவான எதிர்பைக் கொண்டிருந்தாலும், காலிஸ்தானியர்கள்  கிளர்ச்சி செய்யும் விவசாயிகளுக்குப் பின்னால் இருந்தாலும், அவர்களுக்கு காலிஸ்தானியர்கள் மீது எந்த அன்பும் இல்லை.

இப்போது, ​​நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த பிற எதிர்க்கட்சிகளும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த  டிக்கைட் போன்ற ஜாட் தலைவர்களும் போராட்டத்தில் இணைந்த நிலையில், இந்த இயக்கம் இனி சீக்கியர்கள் என்ன, பஞ்சாபி விவசாயிகளின் இயக்கமாகக் கூட  கருதப்படப் போவதில்லை. காலிஸ்தானிய தீவிரவாதிகள் மற்றும் ஜெனரல் பஜ்வாவின் ISI திட்டம் தோல்வியில் தான் முடியும். 

Translated From: Indian Century 

Similar News