பெண்ணை கற்பழித்த பாதிரியார்! பழியை தந்தை மீது போட்ட கொடூரம்!

Update: 2021-10-15 10:51 GMT

மிஷன் காளி நேயர்களுக்கு வணக்கம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, 'எப்படி கனடா நாட்டில் கிருஸ்தவ மிஷனரிகள் அந்த ஊரைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் பிள்ளைகளை கொலை செய்து புதைத்தார்கள்?' என்ற விஷயம் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதைத் தொடர்ந்து அந்த ஊரில் சர்சுகளைத் மக்கள் தேடித்தேடி அடித்து நொருக்கினார்கள். ஆனால் கனாடவில மட்டும் கிடையாது. சர்சுகள் எந்த ஊரில் எல்லாம் இருக்கிறதோ அந்த ஊரில் எல்லாம் அவர்களால் பாலியல் சீண்டல் நிகழ்த்தப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக எல்லா சம்பவங்களுமே கனடா நாட்டில் நிகழ்ந்த சம்பவங்களைப் போல மீடியாவின் வெளிச்சத்திற்கு வராமல் போய்விடுகிறது.

இல்லைன்னா… மீடியாக்களால் முக்கியத்துவம் தரப்படாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைப் பற்றித்தான் இன்னைக்கு நாம பார்க்கப்போகிறோம். இந்த சம்பவம் ஏதோ ஒரு வெளிநாட்டில் நடந்த சம்பவம் கிடையாது. நம்ம பக்கத்து மாநிலமான கேரளாவில்தான் இந்த சம்பவம் நடந்து இருக்கு.

அங்க என்ன நடந்துச்சுனு இப்ப விரிவாக பார்ப்போம்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது செயிண்ட் செபாஸ்டின் சர்ச்! அந்த சர்சில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கன்சேரி. சர்சுக்கு பாதிரியாக மட்டுமில்லாமல் இவர் அதேபள்ளியில் இருந்த ஒரு கிருஸ்தவ மிஷனரி பள்ளிக்கூடத்திற்கு கரென்ஸ்பாண்டெட் ஆகவும் இருந்தார். மேலும் சர்சின் ஊடகத்துறை பிரிவிலும் இவருக்கு பொருப்பு இருந்திருக்கு. தீபிகா என்ற கிருஸ்தவ நாளிதழின் ஆசிரியராகவும் இவர் பொருப்பில் இருந்திருக்கார்.

இப்படி ஒரு முக்கியப் பொருப்பில் இருப்பவர் என்ன செய்தார்? சர்சால் நடத்தப்படும் கம்யூட்டர் வகுப்பில் படிப்பதற்காக பல மாணவிகள் வந்துள்ளனர். அதுல ஒரு மாணவியை இவர் தன்னோட வலையில் வீழ்த்தியிருக்கிறார். அதுமட்டுமல்ல அந்த மாணவியோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அவரை கெடுத்து கர்பமாக்கியிருக்கிறார். இதனால் அந்த மாணவி கர்பமடைந்தார். இவ்வளோ பெரிய விஷயம் நடந்துடுச்சு.. ஆனால் அந்த பாதிரியார் துளியும் பயப்படலை… ஏன் தெரியுமா? ஏன்னா அவருக்குத்தான் சர்ச் நிர்வாகத்தோட சப்போர்ட் முழுசா இருக்கே?

பாலியல் குற்றச்சாட்டுகளில் பாதிரியார்கள் சிக்குவதும், அவரைக் காப்பாற்ற சர்ச் நிர்வாகம் மோசடிகளில் ஈடுபடுவதும் ஒன்னும் புதுசு இல்லை. ஏற்கனவே சர்சுக்குள் நடந்த பாலியல் முறைகேடுகளைப் பற்றி வெளியே சொன்ன லூசி கலபுராவை சர்ச்சை விட்டு ஒதுக்கி வச்சாங்க. இப்போ அவங்க தங்கியிருக்கும் கான்வெண்டில் அவங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்துதரமாட்டேன் அப்படினு நிர்வாகம் சொல்லிடிச்சு. ஏன் நம்ம லயோலா கல்லூரியை எடுத்துக்கோங்க… அந்த கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் அசோசியேஷனில் பணிபுரிந்து வந்த மேரி ராஜசேகரன் என்பவருக்கு அந்த கல்லூரியின் முன்னாள் முதல்வர் சேவியர் அல்ஃபோன்ஸ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததா புகார் இருக்கு. ஆனால் இன்னைக்கு வரைக்கும் சேவியர் அல்ஃபோன்ஸ்-ஐ காப்பாற்ற லயோலா நிர்வாகம் துடிச்சுகிட்டு இருக்கு.

அதெப்போலத்தான் கர்ம சிரத்தையோட சிறுமியை பலாத்காரம் செய்து கர்பமாக்கிய இந்த பாதிரியார் ராபின் வடக்கன்ச்சேரியையும் காப்பாத்த சர்ச் நிர்வாகம் முடிவு செஞ்சுது. ஏற்கனவே பார்த்த மாதிரி பாதிரியார்கள் பாலியல் வழக்குகளில் சிக்குவது இது புதுசு இல்லை. அதனால் இந்த சிக்கலை எப்படி ஹேண்டில் பண்ணுவது அப்படினு சர்சு நிர்வாகத்திற்கு நல்லாவே தெரிஞ்சு இருக்கு. பாதிக்கப்பட்ட அந்த மாணவியோட குடும்பம் ஏழ்மையான நிலையில் இருப்பதா சொல்லப்படுது. உடனடியா அந்த மாணவியின் பெற்றோரை அழைத்து அவர்களுக்கு காசு கொடுத்து சரி கட்டப் பார்த்திருக்காங்க. ஆனால் அதுக்கு அவங்க உடன்படவில்லை. இதுக்கு அவங்க மசியவில்லை என்று தெரிந்ததும், நேரடியாக மிரட்டிலில் இறங்கத்தொடங்கியிருக்கிறார்கள். நடந்த சம்பவத்தைப் பற்றி யார் கிட்டயாவது மூச்சு விட்டா அவ்வளவுதான் என்று மிரட்டியிருக்கிறார்கள். அதைவிட அசிங்கம் என்ன தெரியுமா? அந்த மாணவி கர்பமானதுக்கு அவங்க அப்பாதான் காரணம் என்று சொல்லி குடும்பத்தையே அதிர்ச்சியில் உறையவைத்துள்ளார்கள். பிறகு மொத்த குடும்பத்தையும் அந்த சர்சு நிர்வாகம் தங்களோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துவிட்டது.

புத்திசாலித்தனமா, கர்பமான பெண்ணை கிருஸ்து ராஜ் அப்படிங்கிற கிருஸ்தவ மிஷனரி மருத்துவமனையிலேயே பிரசவத்திற்காக சேர்த்துவிட்டுட்டாங்க. அந்த பெண்ணுக்கு டெலிவரி பார்த்து இருக்காங்க. அனைத்துமே கிருஸ்தவ மிஷனரிகள் கட்டுப்பாட்டில் இருந்ததால் விவகாரம் தெரியவில்லை. அதுக்குப்பிறகு குழந்தை பிறந்தவுடனேயே, நைசா அந்தக் குழந்தையை எடுத்து வயநாட்டில் உள்ள ஒரு அநாதை இல்லத்திலும் சேர்த்து இருக்கிறார்கள் பாதிரியார் ராபின் வடக்கன்சேரியின் ஆட்கள். அநேகமா அந்த அநாதை இல்லமும் மிஷனரிகளால் நடத்தப்படும் அநாதை இல்லமாகவே இருக்க வாய்ப்பு இருக்கு.

அப்படியே அந்த பாதிரியார் வெளிநாடு தப்பிச் செல்லவும் திட்டம் போட்டிருக்கிறார்.அதாவது கிட்டத்தட்ட அந்த பாதிரியார் சேஃப்.

இதைத்தொடர்ந்துதான் அந்தப் பெண் எமெர்ஜென்சி ஹெல்ப்லைனுக்கு கால்பண்ணி விஷயத்தை சொல்ல, போலீஸ் வந்து பரவூரில் தங்கியிருந்த பாதிரியாரை கைது செய்துள்ளது.

ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் இன்னமும் அந்த பாதிரியாரை காப்பாற்ற சர்ச் நிர்வாகம் துடிச்சுகிட்டு இருக்கு என்பதுதான். அதே சர்ச்சை சேர்ந்த மற்றொரு பாதிரியாரான வர்கீஸ் வல்லிகட் என்பவர் குற்றம்சாட்டப்பட்ட பாதிரியாரைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் சர்சு எடுக்கும் என்று அறிவித்து இருக்கிறார். இதுக்கு நடுவுல் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கு.

ஆனால் இப்போ அந்தப் பெண்ணை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்னை விட்டுவிடுங்கள் அப்படினு அப்பீல் செய்திருக்கிறார். அது தள்ளுபடி செய்யப்பட்டதால் இப்போ அந்த ப் பெண்ணையே திரும்ப மிரட்டி அவரை விடுதலை செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

ஆக, இன்னமும் அந்த பாதிரியாரை விடுவிக்க சர்ச் நிர்வாகம் போராடிகிட்டுதான் இருக்கு.

நன்றி.

Tags:    

Similar News