ஆம். ஒரு மகாத்மா தான் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார்.. அவர் பெயர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.!
ஆம். ஒரு மகாத்மா தான் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார்.. அவர் பெயர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைந்து போய் 70 ஆண்டுகள் ஆன பிறகும் இந்திய மக்கள் அவரைப் பற்றிய உண்மைகளை அறிய மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? அந்த பதிலின் ஒருபகுதி நேதாஜி நமக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதில் அடங்கியுள்ளது.
வகைப்படுத்தப்பட்ட பதிவுகள், நிகழ்வுகள் நடந்த போது அதனை அருகிலிருந்து பார்த்தவர்களின் சாட்சியங்கள், கொஞ்சம் பொது அறிவு இவை எல்லாவற்றையும் நாம் சேர்த்து வைத்து பார்த்தால் கூட நேதாஜி, பிரிட்டிஷ் ராஜ்யத்திற்கு ஒரு மிகப்பெரிய அடி கொடுத்தார் என்பது தெளிவாகத் தெரியும்.
பிரிட்டிஷார் 1947ல் இந்தியாவிற்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுப்பதில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்கு எவ்வளவு பெரியது என்று அரசியல் காரணங்களுக்காக ஒப்புக்கொள்ளப்படுவதில்லை. உண்மையில் சொல்லப்போனால் இரண்டாம் உலகப்போர் 1939ல் தொடங்கியபோது இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் என்று ஒன்றே நடந்து கொண்டிருக்கவில்லை. உலகப்போர் ஆரம்பித்த போது, அது வாழ்க்கையில் கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பு என்று கருதிய நேதாஜி, பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு ஆறு மாதங்களுக்குள் வெளியேற வேண்டும் என்று இறுதி கெடு கொடுக்குமாறு காங்கிரசாரை கேட்டுக் கொண்டார். காந்தியின் தலைமையின் கீழ் இருந்த காங்கிரஸ், பிரிட்டிஷாருக்கு அழுத்தம் கொடுக்கும் எந்த செயலையும் செய்வதற்கு தயாராக இல்லை.
காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ், இந்தியாவை விட்டு வெளியேறி இந்திய தேசிய ராணுவத்தின் (INA) தலைவரானார். இப்பொழுதும் இந்திய தேசிய ராணுவத்தை பலர் இங்கே கிண்டல் செய்வார்கள், அதை மிகவும் பெரிய நன்றாக பயிற்சி பெற்ற பிரிட்டிஷ் இந்திய இராணுவத்துடன் ஒப்பிட்டு. ஆனால் சந்திரபோஸ் எந்த அளவு தடைகளைத் தாண்டி அப்படி ஒரு ராணுவத்தை மிக குறுகிய காலத்தில் கட்டமைத்தார் என்பதை மறந்து விடுகிறார்கள்.