"திருப்பதி கோவில் முன் ஒரு போட்டோ எடுக்க முடியாது, ஆனா தமிழக கோவில்கள் மோசம்" - கடுப்பான மதுரை நீதிமன்ற நீதிபதிகள்
கோவில்களில் லெக்கின்ஸ், ஷார்ட்ஸ், ஜீன்ஸ் அணிவது சிலைகள் முன்பு செல்பி எடுப்பது குறித்து நீதிபதிகள் அதிருப்தி கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவில்களில் லெக்கின்ஸ், ஷார்ட்ஸ், ஜீன்ஸ் அணிவது சிலைகள் முன்பு செல்பி எடுப்பது குறித்து நீதிபதிகள் அதிருப்தி கருத்து தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூரை சேர்ந்த சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கோவில் சிலைகள் பாதுகாப்பு, திருட்டு அச்சம் குறித்த காரணங்களால் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. சில கோவில்களில் சிலைகள் திருடு போன சம்பவங்களும் நடந்துள்ளன, திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக சாமிக்கு அபிஷேகம் செய்யும் போது சிலர் செல்போன் பயன்படுத்துவது, சிலைகள் முன்பு செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இது தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு விசாரித்த போது, 'கோவில் உள்ள அர்ச்சகர்களை புகைப்படங்கள் எடுத்து அவர்களுடைய தனிப்பட்ட youtube சேனலில் பதிவிடுகிறார்கள் இதை ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டுக்குள்ள கோவில்கள் சத்திரமா? திருப்பதி கோவிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்பு நின்று செல்பி எடுத்துக் கொள்கின்றனர். கோவில் சுற்றுலா தலங்கள் அல்ல.
கோவிலுக்கு வருபவர்கள் நாகரிகமான உடைகள் அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் நனைந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறினார்கள் மேலும் இந்த வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள்.