நாமக்கல் ஆஞ்சநேயருக்கு மாசி முதல் ஞாயிறு அபிஷேகம் விழா கோலாகலம்!
மாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 13) என்பதால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.;
மாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 13) என்பதால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.
நாமக்கல் நகரில் சுமார் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சாமி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். அதாவது ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ் மற்றும் தெலுங்கு வருட பிறப்புகளின்போதும், தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமைகளிலும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு வருகை புரிவர்.
அதே போன்று நேற்று மாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் ஆஞ்சநேயர் சாமிக்கு நடைபெற்றது. காலை 10 மணிக்கு வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்களும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு வெண்பட்டு அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Source, Image Courtesy: Dinamalar