மனித இனத்திற்கு மிக அடிப்படையானது தண்ணீர். நீரின்றி அமையாது உலகு என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. இந்த உலகம், இந்ந்த பூமி தொடர்ந்து நிலைத்திருக்க தண்ணீர் இல்லை. இந்து மதத்தில் தண்ணீருக்கு புனித இடம் உண்டு. காரணம் அதற்கென இருக்கும் புனித தன்மைகளும் ஆச்சர்யமான ஆற்றலும்.
இந்து மரபில் நீர் என்பதே தெய்வம் தான். குறிப்பாக, ஆறு, நதி ஆகியவற்றை தெய்வமாக வணங்கும் வழக்கம் உண்டு. அதனடிப்படையில் ஏழு புனித நதிகள் வணங்கப்படுகிறது. கங்கா, யமுனா கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து மற்றும் காவேரி ஆகியவை ஏழும் மிக முக்கியமானது. தண்ணீர் என்பது அடிப்படை தேவைக்கானது மற்றும் தாகம் தீர்க்க பயன்படுவது என்பதை தாண்டி எதிர்மறை தன்மைகளை அகற்றும் தன்மை நீருக்கு உண்டு.
சில புராணங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்த நீரை கொண்டு செய்யக்கூடிய சில பரிகார குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. உதாரணமாக, வீட்டில் இருக்கும் தீய சக்திகள் நீங்க வேண்டுமெனில், ஒரு பானை அல்லது குவளை நிறைய நீரை சூரியனுக்கு கீழ் வைத்து வணங்கி அந்த நீரை மாவிலை கொண்டு வீடு தோறும் தெளித்து பின் விஷ்ணு பெருமானின் ஸ்லோகத்தை சொல்லி வர எந்தவிதமான தீய சக்திகளும் அந்த நொடி முதல் வீட்டிற்குள் நுழையாது.
அடுத்து ஒரு கிண்ணம் நிறைய நீரில் கல் உப்பு அல்லது கடல் உப்பினை கலந்து வீட்டு வாயிலில் வைத்து விட வேண்டும். அந்த நீரினுடைய நிறம் மாறும் போது அதனை அகற்றி விட்டு வேறு நீரை மாற்ற வேண்டும். காரணம் அந்த நிற மாற்றம் என்பது வீட்டிலிருக்கும் தீய சக்திகளை அந்த உப்பு நீர் உறிஞ்சியதால் என்கிற கூற்று உண்டு.
வீடுகளில் விஷ்ணுவின் அம்சமான சங்கினை வைத்திருப்பவர்கள் உண்டு. அப்படி பட்டவர்கள், அந்த சங்கில் நீரினை ஊற்றி வீடெங்கும் தெளித்து பின் தினசரி மாலை வேளையில் சங்கினை ஒலிக்க செய்து அதனை தினமும் பராமரித்து வர வீட்டிலிருக்கும் தீமை நீங்கும்.
நீங்கள் தொடர் நஷ்டத்தை அல்லது தோல்விகளை சந்தித்து வந்தால், உங்கள் வீடுகளில் எத்தனை மூலையிருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு காகிதத்தில் சிறிது உப்பினை கட்டி வைத்து விடுங்கள். அதிகாலையில் எழுந்து யாரிடமும் பேசாமல், அந்த காகித உப்பினை எடுத்து ஓடும் தண்ணீரில் விட்டுவிட்டால் அனைத்து தீமைகளும் தண்ணீரோடு சென்று விடும் என்பது நம்பிக்கை