பழைய ரசீதுகளை சட்டைபையில் வைப்பவரா நீங்கள்? அவசியம் படியுங்கள்

Update: 2022-04-21 02:29 GMT

பணம், செல்வம் அனைத்தும் ஒருவரின் உழைப்பால், கடின முயற்சியால், திறமையால் மாத்திரமே ஈட்ட இயலும். இதற்கான மாற்று வழி அல்லது குறுக்கு வழி என எதுவும் இல்லை. அப்படி அறமற்று சேரும் பொருளில் எந்தவித நல்ல பலன்களும், வினைகளும் ஏற்படப் போவதில்லை.

இருப்பினும், நல்ல அதிர்வுகளை, பொருள் சேர்வதற்கு சாத்தியமான சூழலை ஏற்படுத்த வெளி நிலையில் சில அமைப்புகளை ஏற்படுத்தினால், பணம் சேர்வதற்கான சாத்தியங்கள் அதிகம் என சொல்லப்படுகிறது. இதனை மூட நம்பிக்கை என ஒரே வார்த்தையில் ஒதுக்கியும் விடலாம். சில நல்ல அம்சங்களை எந்த எதிர்பார்ப்புமின்றி முயற்சித்தும் பார்க்கலாம். அந்த வகையில் ஒருவர் தன்னுடைய சட்டை பையில் அல்லது பாக்கெட்டில் பல விஷயங்களை வைத்திருப்பார்கள். அதில் சில விஷயங்களை தவிர்த்தால் பண வரவிற்காக நல்ல சூழ்நிலை உருவாகும் என வாஸ்து சொல்கிறது.

நாம் பொதுவாக, பணம், கைகுட்டை, வண்டி சாவி, வீட்டு சாவி, பல விதமான காகிதங்கள் என ஏராளமானவற்றை சட்டை பையில் வைத்திருப்போம். அதில் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

பழைய ரசீதுகள்.

நம்மில் பலர் எப்போதும் ஒரு கொத்து பழைய ரசீதுகளை சட்டைபையில் வைத்திருப்போம். அதற்கு காரணமே இராது. அது போன்ற இரசீதுகளை உடனடியாக அப்புறப்படுத்துங்கள்.

விநோதமான படங்கள்

சிலர் பேஷன் என்ற பெயரில் டிராகன் மற்றும் இதர விநோத புகைப்படங்களை சட்டை பையில் வைத்திருக்கலாம். அது போன்ற நம் மன அமைதியை குலைக்கும் விதமான படங்களை தவிர்ப்பது நல்லது.

கிழிந்த பணப்பை

உணர்வு ரீதியாகவும், சிலரின் நினைவாகவும் நாம் பர்ஸை மாற்றாமல் வைத்திருப்போம். ஆனால் கிழிந்த அல்லது சேதமடைந்த பர்ஸை பயன்படுத்துவது சாஸ்திரத்தின் படியும் சரியானதல்ல, நம் பாதுகாப்பு ரீதியாகவும் சரியானது அல்ல.

திண்பண்டங்கள்

சிலர் திண்பண்டங்களை வாங்கி பாதி உண்டுவிட்டு குழந்தை தனத்துடன் அல்லது குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக மீதியை அப்படியே சட்டை பையில் வைத்து கொள்வார்கள். இது உணவுக்கு நாமளிக்கும் மரியாதையை குறைப்பதாகும். எனவே இதை தவிர்க்க வேண்டும்.

எவற்றை வைக்க கூடாது என்று பேசும் வேளையில் எவற்றை வைத்தால் பணத்தை பெருக்கும் சூழல் அமையும் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம், தாமரை வேர், அரச மலை இலை, சிறிய சங்குகள், மஹாலட்சுமியின் புகைப்படம் போன்றவை. இவையெல்லாம் வெளிப்புற சூழலை நல்லவிதமாக அமைக்க மட்டுமே உதவுமேயன்றி நம் உள்புறத்தில் நாம் திறமையை வெளிப்படுத்தி, அறத்துடன் நடந்தால் மட்டுமே உண்மையான பொருளை ஈட்ட இயலும். 

Similar News