சனிபிரதோஷத்தில் விரதமிருப்பதால் இப்படியொரு அதிசய பலனா? ஆச்சர்ய தகவல்

Update: 2022-04-23 01:30 GMT

ஒவ்வொரு மாதமும் அமாவசை மற்றும் பவுர்ணமியை அடுத்து வரும் வளர்பிறை தேய்பிறையில் வருகிற திரியோதசி திதியில் வருவதே பிரதோசம் ஆகும். இந்த நாளில் சிவனையும், நந்தி தேவனையும் வழிபடுதல் மிகவும் சிறப்பான பலன்களை தரும். குறிப்பாக பிரதோஷம் சனிக்கிழமைகளில் விழுகிற போது அதனை சனி ப்பிரதோசம் என்கின்றனர். சனிபகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் பிரதோசம் அமைந்து நாம் சிவபெருமானை வணங்குகிற போது தீராத தோசங்களும், வினைகளும் தீரும் என்பது நம்பிக்கை.

சனிப்பிரதோசம் மூன்று வகைப்படும், உத்தம, மத்திம மற்றும் அத்தம பிரதோசம் எனப்படும். இதில் உத்தம சனிப்பிரதோஷம் என்பது தமிழ் மாதங்களான சித்திரை, வைகாசி, ஐப்பசி மற்றும் கார்த்திகையில் சுக்கிலபட்சத்தில் வருவது. மத்திம சனி பிரதோசம் என்பது, சித்திரை, வைகாசி, ஐப்பசி மற்றும் கார்த்திகையின் கிருஷ்ன பட்சத்தில் வருவது. மற்ற சனிப்பிரதோசங்கள் யாவும் அத்திம சனிப்பிரதோசத்துள் அடங்கும்.

இந்த நாளில் ஒருவர் விரதம் இருப்பார் எனில், மற்ற நாளில் வரக்கூடிய பிரதோசங்களில் ஆயிரம் பிரதோச தினப்பலனை ஒருவருக்கு வழங்கும் வல்லமை கொண்டது. இந்த பிரதோச நேரத்தில் தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு இந்த உலகத்தை காத்தருளினார் என புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

சனி மகா பிரதோசத்தன்று நந்தி தேவனுக்கு அருகம்புல் அல்லது வில்வம் சாற்றி வழிபடுவது சிறப்பு தரும் காரணம், திரயோதசி திதியில், சந்தியா காலத்தில் ஈசன் ஆடிய தாண்டவத்தின் பெயர் பிரளயத்தாண்டவம். இது நந்தி பகவானின் கொம்புகளுக்கு இடையே ஆடப்பட்டது என்பது நம்பிக்கை. எனவே இந்த பிரதோச நாளில் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே இறைவனை தரிசிப்பது பெரும் சிறப்பை தரும்.

எனவே சனிபிரதோசம் நாள் முழுவதும் உணவை துறந்து பிரதோச தரிசனம் கண்டு சோம சுக்த பிரதக்‌ஷணம் ( இது பிரதோசத்தன்று பிரத்யேகமாக கோவிலை சுற்றும் முறை நந்தி தேவரை வணங்கி, ஈசனுக்கு அபிஷேகம் நிகழ்ந்த நீர் வழியும் கோமுகி வரையில் வந்து வணங்கி பின் அங்கிருந்து சண்டிகேஸ்வரர் வந்து அவரையும் வணங்கி மீண்டும் கோமுகிக்கும் திரும்பும் இந்த வகை பிரதக்‌ஷ்ணம் பிரதோச பிரதக்‌ஷ்ணம் என அழைக்கப்படுகிறது) செய்தால் 120 ஆண்டுகள் பிரதோச வழிபாடு செய்த பலனை ஒருவர் பெற முடியும்.

அனைத்து விதமனா கர்மங்களிலிருந்தும், விடுதலை அளிக்கும் ஒப்பற்ற விரதம் சனி மஹா பிரதோச விரதம். 

Similar News