வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வெறும் கையுடன் அனுப்ப கூடாது என்பது ஏன்?

Update: 2022-05-05 01:45 GMT

மனிதர்கள் பொருள் ரீதியான உலகில் சிக்கி தவிப்பதும், பொருளை நோக்கி செல்வதும் வழக்கமாக நடப்பது. இந்து மரபில் லட்சுமி தேவி பொன்னையும், பொருளையும் காத்து அருள்பவராக இருக்கிறார்.

பொருள் ரீதியான அம்சங்களை ஒரு மனிதர் அதிகம் விரும்ப கூடாது என்றாலும். அடிப்படை வாழ்விற்கு அத்தியாவசிய பொருளாதாரம் என்பது முக்கியமானது. வளமான வாழ்வில் ஒரு சிறு சறுக்கல் இருந்தாலும் அது சிக்கலான வாழ்வை தரலாம் .

கடின உழைப்புக்கு நிகரானது எதுவும் இல்லை. கடின உழைப்பை தவிர பொன்னையும், பொருளையும் தரும் மாற்று வழி என ஏதுமில்லை. ஆனாலும், ஒரு சிலர் தங்கள் நூறு சதவீத உழைப்பை கொடுப்பார்கள். ஆனால் எதிர்பாரா விதமாக எதிர்பார்த்த பலன்களை பெறாமல் போய்விடுகிறார்கள். இந்த துர் அதிர்ஷடத்தை போக்க சாணக்கியர் சொல்லும் வழிகள்.

மயூரா சாமராஜ்யத்தின் பழம்பெரும் ஆசிரியராக, பொருளாதார நிபுணராக, தத்துவ ஞானியாக, அரசு அலோசகராக இருந்தவர் சாணக்கியர். அவர் சொல்லும் தார்பரியம் யாதெனில், ஒருவருக்கு கடின உழைப்பு மாத்திரம் போதாது அதனுடன் ஸ்மார்ட் வர்க் என்று இன்ரைய நவீன மேலாண்மை சொல்லக்கூடிய புத்தி சாதுர்யமான உழைப்பும் தேவை.

மேலும், முர்க யாத்ர பூஜ்யந்தே, தன்யம் யத்ரா சுசின்சித்தம், தாம்பத்யே கலஹோ நாஸ்தி தத்ரா ஶ்ரீ ஸ்வயமாகத்தா என்கிறார். இதன் பொருள், ஒருவர் லட்சுமியின் அருளை பெற, பின்வரும் மூன்று விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.

வீட்டில் அறிவும், ஞானமும் கொண்டிருப்போரை அங்கீகரித்து அரவணக்க வேண்டும். யாரொருவர் அறிவை ஞானத்தை அங்கீகரிக்கிறாரோ அந்த இல்லத்தில் தான் இலட்சுமி தேவி வாசம் செய்வாள்.

அடுத்ததாக எந்த இல்லத்தில் ஒரு விருந்தாளி முறையாக நடத்தப்படுகிறாரோ அதுவே சிறந்த இல்லம். அந்த விருந்தாளியின் தகுதி குறித்து எந்த பிரஞ்கையும் இன்றி ஒருவர் முறையாக நடத்தப்படுவது ட அவசியம். எந்த இல்லத்திற்கு ஒன்றை வேண்டி சென்ற ஒருவர் வெறும் கையுடனும், வெறும் வயிறுடனும் திரும்புவதில்லையோ அங்கே இலட்சுமி தங்கியிருப்பாள்.

அடுத்து மிக முக்கியமாக எங்கே கணவனும், மனைவியும் உண்மையான அன்புடன், கருணயுடன் திகழ்ந்து இல்லறம் நடத்துகிறார்களோ அங்கே இலட்சுமி பரிபுரண அருள் புரிவார்.

Similar News