பக்தர் தரிசிக்க நந்தியை விலக சொன்ன சிவபெருமான். அதிசய ஆலயம்!

Update: 2022-05-06 01:15 GMT

தமிழகத்தில் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருபுன்கூர் எனுமிடம். அங்கிருக்கும் சிவலோக நாதர் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களுள் ஒன்று. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு 3 மைல் மேற்கில் இக்கோவில் அமைந்துள்ளது. தேவாரம் பாடல் பெற்ற தலம், இங்கு அப்பர் சுந்தரர் மற்றும் சம்பந்தர் ஆகிய மூவரும் பாடியுள்ளனர். தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு வடக்கரை தலங்களில் இத்தலம் 20 ஆவதாக பாடப்பெற்றதாகும்.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் ஆச்சர்ய புராணக்கதை யாதெனில். நந்தனார் என்கிற அதி தீவிர பக்தர் அய்யனின் தரிசனம் காண தவித்து கிடந்தார். அவருடைய முதலாளியின் அனுமதிக்காக ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் காத்திருப்பார். ஒருநாள் அவர் அனுமதியளிக்கவே அவர் கோவிலுக்கு மிகுந்த பரவசத்துடன் தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் தரிசனத்திற்காக கோவில் முன் நின்றார். நந்தனார் வந்திருக்கும் தகவலை துவாரபாலகர்கள் அய்யனுக்கு தெரிவிக்கவே, சிவபெருமான் நந்தியை தனக்கு முன்னிருந்து சற்று விலகி கொள்ளுமாறு பணித்தார். அதன் படி நந்தி விலகி கொள்ள நந்தனார் கீர்த்த தரிசனம் கண்டார்.

மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் பிற்காலத்தில் ராஜேந்திர சோழர்களால் புணரமைக்கப்பட்டிருக்கலாம் என எண்ணப்படுகிறது. முன்னொரு காலத்தில் புன்னை மரங்கள் நிரம்பியிருந்த அடர் வனத்தில் இக்கோவில் இருந்ததால் இக்கோவிலுக்கு புன்கூர் கோவில் என்ற பெயரும் உண்டு. பின்பு அதுவே மருவி ஊரின் பெயராக ஆனது.

ஒரு னது. இக்கோவில்களின் சிறப்பம்சம் யாதெனில் இங்கு தரிசிப்போருக்கும் திருமணத்தடை நீங்கும் என்பதே. இந்த கோவிலிலும் திருமண தடையிருக்கும் பக்தர்கள் பெருவரியாக திரள்கிறார்கள். அதுமட்டுமின்றி நாக தோஷம் இருப்பவர்களுக்கும் இக்கோவிலில் தரிசனம் செய்தால் நிவர்த்தியாகிறது என்பது நம்பிக்கை.

இங்கிருக்கும் அம்பிக்கைக்கு செளந்தர நாயகி என்று பெயர். இங்கு நிகழும் வைகாசி விசாகம் பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த பத்து நாட்களும் நிகழும் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் யாதெனில் இங்கிருக்கும் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தோன்றியவர். இக்கோவிலில் இருக்கும் மகா மண்டபத்தில் நடராஜர் சிவகாமி அம்மையோடு நட்டம் ஆடும் கோலத்தில் காட்சி தருகிறார். 

Similar News