பறவைகள் வீட்டினில் கூடு கட்டியிருக்கிறதா ? அவையுணர்த்தும் ஆச்சர்ய செய்தி என்ன?

Update: 2022-05-12 01:30 GMT

உயிரனங்களில் பறவைகளுக்கு உன்னதமான இடமுண்டு. பறவைகளை நம் மரபில் பெரும்பாலான சூழலில் தெய்வத்தின் பிரதிநிதியாகவே நாம் கருதுவதுண்டு. கருடன், மயில் போன்ற பறவைகள் தெய்வங்களின் இருப்பை உணர்த்துகின்றன. காகம் போன்ற பறவைகள் இறந்தவர்களின் பிரதிநிதியாக கருதப்படுகிறது. மொத்தத்தில் பறவைகளும் தெய்வீகத்திற்கும் வலிமையான தொடர்புண்டு.

நம் பாரம்பரியத்தில் வீடுகளில் பறவைகள் கூடு கட்டினால், கூடு கட்டும் பறவைகளுக்கும், சூழலுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு விதமான பலன்கள் சொல்லப்படுவதுண்டு. பொதுவாக ஒரு பறவை கூடு கட்டுகின்றது என்றால் அவை பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து பின் தான் கட்டும். அதுவும் குறிப்பாக நம் வீடாக இருக்கிற போது அவை உணர்த்தும் பலன் என்ன என்பதே கேள்வி.

கூடு என்பது உயிர்கள் பிறந்து வாழ்வதற்கான ஒரு இடம். எனவே இது வீட்டிற்கு நல்ல சகுனம் என்பதை தான் உணர்த்துகிறது. பொதுவாக வீடுகளில் பறவைகள் கூடு கட்டினால் அந்த்அ வீட்டிற்கு இலட்சுமி கடாக்‌ஷ்ம் இருக்கும் என்றும் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி வீட்டின் வாசலில் ஜன்னலில் பறவைகள் கூடு கட்டினால், வாழ்கை மாற இருக்கிறது என்பதன் அறிகுறி என்று சிலர் சொல்கின்றனர். அதாவது எதிர்பார்த்த மாற்றம் நிகழ இருப்பதன் அறிகுறி. வெறுமனே பணம் மற்றும் பொருளாதார மாற்றம் மட்டுமின்றி வேறு வகையான வாழ்கை மாற்றத்தையும் ஒருவர் எதிர்பார்க்கலாம்.

வீட்டின் வாயில் கதவில் பறவை கூடு கட்டியிருந்தால் நம்மை யாரோ பாதுகாக்கிறார்கள் என்று பொருள். நமக்கு நிகழவிருக்கும் தீமைகளில் இருந்து நம்மை யாரோ பாதுகாக்கிறார்கள்.

மன அமைதி, ஒரு உயிர் நாம் வாழும் இடத்தில் வளர்கிறது என்கிற மன நிறைவு போன்ற நேர்மறையான தாக்கங்களும், நல்ல வகையிலான உளவியல் மாற்றங்களும் ஓரு மனிதருக்கு ஏற்படும்.

இவையனைத்தையும் மீறி நீங்கல் பறவைகூடு கட்டுவதை விரும்பவில்லையெனில் அவை கூடினை அமைக்கும் காலத்திலேயே பிரித்து விடுவது நல்லது. அவை முட்டையிட்ட பின் நாம் அதை பிரிப்பது சகுன ரீதியாகவும் சரி,மனித ரீதியாகவும் சரி உவப்பானது அல்ல. 

Similar News