மரணம் தொடர்பான கனவுகளா? அவை நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?

Update: 2022-05-14 01:30 GMT

மரணம் என்பது மட்டுமே நிஜம், நிரந்தரம் என்ற போதும். மரணம் என்கிற வார்த்தை நமக்குள் ஒரு அச்சுருத்தலை, பயத்தை ஏற்படுத்தி விடுகிறது. காரணம் நாம் பற்றுடன் இருக்கும் யாரையேனும் இழந்துவிடுவோமா அல்லது நம் மீது பற்று கொண்டவர்கள் நம்மை இழந்து விடுவார்களோ என்கிற பதற்றம் தான்.

இப்படியான சூழலில் நாம் அறிந்தவர்கள் மரணிப்பதை போன்ற கனவு வருவது மிகவும் அச்சுருத்தலான ஒரு விஷயம். ஆனால் நாம் எப்போதும் ஒரு பிரச்சனையில் இருக்கும் நல்ல விஷயத்தை மட்டுமே பார்க்க வேண்டும் அந்த வகையில், இப்படியொரு கனவு வந்தால் அதை குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. மாறாக அவை நமக்கும் உணர்த்தும் செய்தி என்ன என்பதே இந்த கட்டுரை

உதாரணமாக, உங்கள் கனவில் ஒருவர் மரணிப்பதை போல் காண்கிறீர்கள். அவர் முதியவரா? ஆம் எனில் அதன் பொருள் உங்களிடம் காலம் தொட்டு ஒரு பழக்கம் இருந்து வருகிறது அந்த பழக்கத்தை நீங்கள் விட வேண்டும் என்று பொருள். அடுத்து உங்கள் உறவினர்கள் யாரேனும் மரணிப்பதை போல் கனவு வந்தால், நீங்கள் அதற்காக பெரிதும் கவலை கொள்ள தேவையில்லை. அவர்களின் உடல்நிலையிலோ உயிருக்கோ எந்த ஆபத்தும் நேராது.

அதன் பொருள் உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மாற்றம் ஒன்று நிகழ இருக்கிறது என்பதன் அறிகுறியே அந்த கனவு. அல்லது வெகு விரைவில் ஒரு மாற்றத்தை சந்திக்க இருக்கிறீர்கள் என்பதை அறிவுருத்துவதாக அந்த கனவு இருக்கும்.

சில நேரங்களில் அந்த குறிப்பிட்ட உறவுடனான , உங்கள் உறவு நிலை மாறக்கூடும் என்பதன் அறிகுறியாகவும் அது அமையலாம். மொத்தத்தில் மரணம் தொடர்பான கனவுகள் நம்மை உணர்வு ரீதியாக அந்த நொடி உருக்குலைய வைத்தாலும், சற்று விழிப்புணர்வுடன் சிந்தித்தால் அதை குறித்து அச்சம் கொள்ள தேவையேயில்லை.

இன்னும் விளக்கி சொன்னால், யார் மரணிப்பதாக கனவு காண்கிறோமோ அவர்களின் ஆயுள் பல மடங்கு கூடவிருக்கிறது என்ற திடமான நம்பிக்கையும் மக்களிடம் உண்டு. நல்ல மாற்றத்தை, புதிய திருப்பங்களை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம் என்பதே மரணம் தொடர்பான கனவுகள் குறித்து சொல்லப்படும் யூகங்கள். 

Similar News