ஆயிரம் தலை கொண்ட அனந்தா நாகத்தின் அருமைகள் அறிவோமா?

Update: 2022-05-24 01:31 GMT

இந்து கலாச்சாரத்தில் நாகங்களை வெறும் ஊர்வன என்று மட்டும் பார்பதில்லை. நாகங்களுக்கு ஆன்மீகத்தில் பெரும் பங்கு உண்டு. ஏராளமான புராண கதைகள் நாகங்களை சுற்றி அமைந்துள்ளன நாக தேவதை வழிபாடு என்கிற ஒன்று பிரத்யேகமாக உண்டு. இந்து கலாச்சாரத்தில் வழிபடப்படும் புனித நாகங்கள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

அனந்தா

ஆயிரம் தலை கொண்ட பிரமான்ட நாகம் இவர். இவரின் மீது தான் மஹா விஷ்ணு பள்ளி கொண்டிருக்கிறார். அனந்தாவை அனந்தஷேசன் என்றும் அனந்த நாகம் என்றும் அழைப்பார்கள். அனந்த சேஷனுக்கு உலகையே தாங்கும் வல்லமை உண்டு என்பது நம்பிக்கை. அனந்த சேஷன் எல்லையற்ற தன்மையை குறிப்பவராக இருக்கிறார்.

வாசுகி

வாசுகி என்பவர் நாகங்களின் அரசன் என சொல்லப்படுவது வழக்கம். வாசுகியின் தலையிலிருக்கும் ரத்தினத்தை நாகமணி என்று அழைப்பார்கள். வாசுகியின் பெருமை இந்திய மரபில் மட்டுமன்றி பெளத்தம், ஜப்பானிய மற்றும் சீன இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ளது. வங்காள மாநிலத்தில் புகழ் பெற்ற மானசா தேவி கோவில் உள்ளது. இந்த தேவி, வாசுகியின் சகோதரி என்ற குறியீட்டுடன் வழிபடப்படுகிறார் . வாசுகியின் பெருமைகள் ஶ்ரீமத் பாகவதத்தில் சமுத்திர மந்தன் அத்தியாத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மேரு மலையை கடந்து அமிர்தம் எடுக்க தேவர்களும், அரக்கர்களும் முற்பட்ட போது வாசுகி பாம்பையே கயிறாக பயன்படுத்தினர் என்பது தெய்வீக வரலாறு.

பிங்கலா

பிங்கலா என்பவர் நாகங்களின் தலைவர். கலிங்கத்தில் இருக்கும் ரகசியத்தை பாதுகாப்பவராக பிங்கலா வழிபடப்படுகிறார் .

தக்‌ஷக்

ஶ்ரீமத் பாகவதத்தில் தக்‌ஷக் குறித்த குறிப்புகள் உண்டு. இவர் பரிக்‌ஷித் எனும் அரசரை வதைத்தவர். துறவி ஒருவரின் சாபத்தை நிறைவேற்ற ஆப்பிளின் வடிவெடுத்து அரசரை கொன்றதாக வரலாறு.

இது போல் பல நாகங்கள் தெய்வங்களாக வழிபடப்படுகின்றன. நாக வழிபாடுக்கென்றே ப்ரத்தியேக தினமாக நாக பஞ்சமி என்ற தினம் உண்டு. அன்றைய நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, கோவில்களில் உள்ள நாக புற்றுகளுக்கு பால் மற்றும் வழிபாட்டு பொருட்களை அர்பணித்து தங்கள் வழிபாடுகளை செலுத்துவது. நாக தோஷம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த தோஷம் உள்ளவர்கள், ஜோதிடரின் அறிவுரையுடன் முறையான பரிகாரங்கள் செய்வது வழக்கம். 

Similar News