வைகுண்ட பிராப்தம் அருளும் ஆயிரமாண்டு அதிசய கோவில் பரமேஸ்வர விண்ணகரம்!

Update: 2022-05-27 01:52 GMT

தமிழகத்தின் காஞ்சிபுர மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆயிரமாண்டு அதிசயமான பரமேஸ்வர விண்ணகரம் கோவில். இக்கோவிலை பரமபத நாதர் கோவில் அல்லது வைகுண்ட பெருமாள் கோவில் என்றும் அழைக்கின்றனர். மங்களாசனம் செய்யப்பட்ட கோவில்களுள் ஒன்று மற்றும் பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் இக்கோவிலும் ஒன்றாக விளங்குகின்றது.

இக்கோவிலை கட்டியவர் பல்லவ மன்னன் கட்டினான் என்பது வரலாறு. புராணங்களின் படி இன்று இக்கோவிலிருக்கும் பகுதி விதர்ப தேசம் என அழைக்கப்பட்டது . இங்கு ஆட்சி புரிந்த மன்னனின் பெயர் விரோச்சா. அவனுடைய தீய செயலின் பயனாய் அவனுக்கு குழந்தைகள் இல்லாமல் போனது. இதனால் மனம் வருந்தி காஞ்சியிலிருக்கும் கைலாச நாதர் ஆலயத்தில் உள்ள சிவபெருமானை எண்னி தவம் புரிந்தான். சிவனும் அவன் பக்தியில் மெச்சி, விஷ்ணு பெருமாளின் துவார பாலகர்கள் இருவர் மன்னனுக்கு மகனாக பிறப்பார்கள் என வரம் அளித்தார். அதன் படி அந்த இரு சிறுவர்களும் இளவரசர்களாக பிறந்தாலும் விஷ்ணு பக்தியில் தலை சிறந்து விளங்கினர்.. அதுமட்டுமின்றி உலக நன்மைகாக அவர்கள் செய்த யாகத்தின் பயனாய், விஷ்ணு பெருமான் வைகுண்ட நாதராக காட்சி அளித்தார். அதுவே இக்கோவிலின் மூலவருக்கு வைகுண்ட நாதர் என்ற திருப்பெயரும் நிலைப்பெற காரணமாக அமைந்த்து

மற்றொரு புராணத்தின் படி பரத்வாஜ முனிவர் இங்கே தவமியற்றி வ்ந்தார் ஒரு கன்னிகையின் அழகில் மயங்கி அவரை மணம் புரிந்தார். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். இதற்கிடையே மீண்டும் தவத்தில் முனிவர் ஈடுபட்ட போது அக்குழந்தையை விஷ்ணு பெருமான் எடுத்து வேடுவ வடிவத்தில அக்குழந்தையை ஆட்கொண்டு "பரமேஸ்வர வர்மன் " என்று பெயரிட்டு வளர்த்தார். வந்திருப்பது விஷ்ணு என்று அறிந்த பரமேஸ்வர வர்மன் விஷ்ணு பெருமானுக்கு மூன்று நிலைகளில் அதாவது, அமர்ந்த, நின்ற மற்றும் சயன கோலத்தில் மும்மாட கோவிலை எழுப்பினான். இந்த பரமேஸ்வர வர்மனே பல்லவ மன்னர்களின் துவக்க மாக அமைந்து ஆட்சி புரிந்தான் என்றும்.

இவருக்கு பின் வந்த இரண்டாம் நந்தி வர்மன் இக்கோவிலை புதுப்பித்து கட்டினார் என்றும் நம்பப்படுகிறது . மேலும் பல்லவ மன்னர்களின் போர்க்ளத்தில் ஒலிக்கும் பறை விண்ணதிர ஒலிக்கும் என்பதை குறிப்பிட்டு மங்களாசனம் செய்துள்ளார் திருமங்கையாழ்வார். அதனாலேயே இக்கோவில் பரமேஸ்வர விண்ணகரம் என்ற திருப்பெயரையும் பெற்றதாம்.

தீராத வினைகள் தீர்ந்து வைகுண்ட பிராப்தியை கொடுக்கும் திருக்கோவில் இது.

Similar News