எத்தனையோ காய்கனிகளிருக்க வீட்டின் முன் திருஷ்டிக்கு பூசணிக்காயை கட்டுவது ஏன்?

Update: 2022-06-04 01:52 GMT

நாம் பயன்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழவகைகள் தான் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும் பெரும்பாலும் தீர்வாக இருந்திருக்கிறது. உடல் ரீதியான பிரச்சனை தொடங்கி மன ரீதியான பிரச்சனை வரை பெரும்பாலும் உட்கொள்ளும் உணவின் மூலமே சரி செய்து கொள்ள முடியும் என்கின்றனர் பெரியோர். அந்த அடிப்படையில் சில சடங்கு சம்பிர்தாயங்களும் இந்த காய் கறிகளை முன் வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த பழக்கம் இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது.

அதில் ஒன்று தான் திருஷ்டி பூசணிக்காய். இன்று நவீன உலகம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், ஐடி பார்க் தொடங்கி அதி நவீன மால் வரை அனைத்து கட்டுமானங்களிலும் இந்த திருஷ்டி பொம்மை அல்லது திருஷ்டி பூசணிக்காய் இடம்பிடித்திருப்பதை பார்க்கலாம். காரணம், இன்றளவும் மக்களுக்கு திருஷ்டி ஆதாவது தீய பார்வை மீதான நம்பிக்கை உண்டு.

தீய சக்தி என்பத்உ மூட நம்பிக்கையல்ல. உதாரணமாக ஒருவர் எதிர்மறையாக பேசினால் ஏன் நெகடிவ்வா பேசுகிறாய் என்கிறோம். நெகடிவ் எனப்படும் அந்த எதிர்மறையான பேச்சும், பார்வையும், ஆற்றலும் ஒன்று சேரும் போது அதையே தீயசக்தி என்கிறோம். காய்கறிகளில் வெள்ளை பூசணிக்காய் மிகவும் நேர்மறை ஆற்றல் கொண்டதாக கருதப்படுகிறது. இளம் பிள்ளைகளுக்கு பூசணிக்காய் சாறு கொடுப்பது மிகவும் உகந்தது என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம்.

பூசணியின் இந்த நேர்மறை தன்மையினை பயன்படுத்தி கொள்ளும் விதமாக தான் இதனை வீட்டின் முன்பு கட்டும் பழக்கம் நம்மிடையே உருவாக்கப்பட்டது. பூசணைக்கு தீய ஆற்றலை உள்வாங்கி நல்ல ஆற்றலை வெளியிடும் தன்மை உண்டு. நம் வீட்டின் முன்பு கட்டப்பட்டிருக்கும் பூசணி அழுகுவதை கண்டால், வீட்டில் யாருக்கேனும் உடல் நலம் குறையப்போகிறது என்பதை நாம் குறிப்பால் உணர்ந்து கொள்ளலாம். காரணம், வீட்டை சுற்றியுள்ள தீய அதிர்வுகளை வீட்டின் உள்ள மனிதர்களுக்கு கடத்தாமல் தனக்குள் உள்வாங்கி கொண்டதன் விளைவே, வீட்டின் முன் கட்டப்பட்டிருக்கும் பூசணி அழுகுவது.

இந்த ஆச்சர்யமான தன்மையிருப்பதால் தான், பூசணிக்காயை உடைப்பது, வீட்டின் முன்பு கட்டுவது, திருஷ்டி படம் வரைந்து திருஷ்டி பூசணியாக பயன்படுத்துவது, என பல்வேறு விதங்களில் பூசணிக்காயை நாம் பயன்படுத்தி வருகிறோம்.

Similar News