ஒரு வீட்டில் வசிக்கிறோம் என்றால் அது பெரிதோ சிறிதோ அவசியம், சில அத்யாவசிய இடங்கள் இருக்கும். அதற்கென பிரத்யேக இடம் இல்லையென்றாலும் நாம் உருவாக்குவோம் இல்லையா? உதாரணமாக உண்பதற்கான இடம், உறங்குவதற்கான இடம் இதுவே பெரிய இல்லமெனில் படுக்கையறை, சமையல் அறை, ஹால் என பிரத்யேக இடமிருக்கும்.
இந்த அத்யாவசிய இடங்களில் மிக முக்கியமாக இடம்பிடிப்பது பூஜை அறை மிகவும் முக்கியமான ஒன்றாகும். பூஜையறையில் நாம் தினசரி விளக்கேற்றுவதும், பூஜைகள் செய்வதும் வழக்கமான ஒன்று தான். ஆனால் செய்யக்கூடாதவை என சில விதிவிலக்குகள் உண்டு. இந்த பரிந்துரைகள் எல்லாமே பூஜையின் போது உருவாகக்கூடிய ஒரு நல்ல ஆற்றலை மேம்படுத்துவதற்கு தான். நாம் தெரிந்தோ தெரியாமோ சில தவறுகள் செய்யக்கூடும். எனவே பூஜையின் போது செய்யக்கூடாதவைகளை பார்க்கலாம்.
பெரும்பாலும் பூஜையை வெறும் வயிற்றுடன் செய்ய முயற்சியுங்கல். வயிறு நிறைய உணவு உண்ட பின் பூஜை செய்வதை தடுக்கலாம். அடுத்து குளித்து முடிந்த பின் புத்துணர்வுடன் பூஜை செய்வது சிறந்தது. உடல் தூய்மையின்றி பூஜை செய்வது உகந்தது அல்ல. ஒருபோதும் பூஜைக்கான பூக்களை, இலைகளை, பழங்களை கடனாக பெறாதீர்கள். உங்களால் இயன்றதை வாங்கி பூஜைக்கு பயன்படுத்துங்கள்.
உங்கள் கைகளை, கால்களை சுத்தம் செய்யாமல் பூஜையறைக்குள் நுழையாதீர்கள். ஏதேனும் உணவை மென்றவாறே பூஜை செய்யாதீர்கல். கவனம் சிதறுவதற்கான வாய்ப்பு உண்டு. பூஜைக்கான பிரசாதம் செய்யும் போது நெய் பயன்படுத்துவது சிறந்தது அதை போலவே தீபத்திற்கு நல்லெண்ணை மற்றும் நெய் பயன்படுத்துவது உகந்தது ஆகும்.
விளக்கிற்கு பருத்தி பஞ்சால் ஆன திரியை பயன்படுத்துங்கள். நூலால் ஆன பஞ்சை தவிர்ப்பது நல்லது. இறைவனின் திருவுருவ படங்களுக்கு அல்லது திருவுருவச்சிலைகளுக்கு இடது கையில் சடங்குகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. அதை போலவே நம் பூஜையறையில் இருக்கும் படங்களை விடவும் உயரமான பீடத்தில் அல்லது ஆசனத்தில் அமர்வதை தவிர்க்கலாம்.
பூஜை முடிந்தவுடன் உடனே அந்த இடத்தை விட்டு எழுந்துவிடாமல் சில நிமிடங்கள் கண் மூடி அமர்ந்து தியானிப்பது மிகவும் நன்மையை தரும். நாம் கண் மூடி அமர்கையில் அங்கிருக்க கூடிய நல்ல ஆற்றலை உள்வாங்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது.