நம்மில் ஒரு சிலருக்கு தான் நேற்றைய இரவில் நாம் கண்ட கனவு நினைவிருக்கும். ஒரு சிலருக்கு நினைவில் இருப்பது போல இருக்கும் ஆனால் வாயில் வார்த்தைகளாக சொல்ல முடியாது. சிலர் கனவுகளுக்கு அதிக கவனம் தர மாட்டார்கள். மேலும் ஒரு சிலருக்கு சில வினோத கனவுகள் வருகையில், இதற்கான காரணம் என்ன என்கிற சிந்தனை ஓடும்.
ஆனால் நிதர்சனம் என்னவெனில், கனவில் நாம் காண்பவை நம் கட்டுபாட்டில் இல்லை என்பதே. ஆனால் ஒரு சில கனவுகள் நம் கடந்த பிறவியுடன், அல்லது வருங்காலத்தில் நிகழவிருப்பவையுடன் தொடர்பு இருப்பதாகவும் இருக்கலாம். கனவுகளுக்கு பலன் சொல்லும் மரபும் நம் பாரம்பரியத்தில் உண்டு.
அந்த வகையில் கனவில் கணபதியை கண்டால் நிகழும் அதிசயம் என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. கணபதியை கனவில் காண்பது என்பது உண்மையில் ஒரு நல்ல சகுனம் தான். காரணம் விநாயகர் தடைகளை நீக்கும் தன்மை கொண்டவர். தடைகளை தகர்க்கும் கடவுள் அவர். நல்லது, கெட்டது மற்றும் எந்தவொரு விஷேசமாக இருந்தாலும் இடம், பொருள் என அனைத்தையும் கடந்து முதன்மையான காரியமாக ஒருவர் செய்து முழுமுதற் கடவுள் கணபதியை வணங்குவதை தான்.
காரணம், நாம் மேற்கொள்ள போகும் காரியம் எந்த இடையூறுமின்றி வெற்றிகரமாக நடக்கவே கணபதியை வணங்குகிறோம். எனவே கணேசரை கனவில் காண்பதால் வெற்றிகளை அடைய போகிறோம் என்று அர்த்தம்
மேலும் விநாயகர் வழிபாடு மிகவும் புனிதமானது மற்றும் சுபமானதாக கருதப்படுகிறது. நன்மைகளை அள்ளி தரும் கடவுள் அவர். எனவே அவரை கணவில் காண்பது அவருடைய அருளுக்கு நாம் பாத்திரமாயிருப்பதை உணர்த்துவது.
மேலும் கணபதியை சமஸ்கிருதத்தில் சுக்கர்த்தா என்றும் அழைக்கின்றனர் இதன் பொருள் ஆனந்தத்தை அள்ளி தருபவர் என்பதாகும். எனவே ஒருவர் கணபதியை கனவில் காண்கிறார் எனில் அவர் நிறைந்த ஆனந்தத்தை பெற இருக்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.
அதே வேளையில் அவரை கனவில் காண்பதால் நாம் ஏதேனும் புதிய தொழில் அல்லது புதிய விஷயங்கள் புதிய ப்ராஜெக்ட் போன்றவற்றை தொடங்கும் சகுனம் எனவும் புரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி ஏதேனும் வேண்டுதல்கள் செய்வதாக வேண்டி நாம் செய்ய தவறியிருந்தால் அதன் நினைவூட்டலாக கூட அந்த கனவு இருக்கலாம்.
கனவில் வரும் கணபதி காரிய வெற்றியை நிச்சயம் அருள்வார்.