வியாபாரத்தில் வீழ்ச்சியா? கருமஞ்சள் பரிகாரம் செய்வதால் நிகழும் நன்மைகள்
நம் ஜனன நேரத்தை வைத்து பல விதமான நன்மையும் தீமையும் நமக்கு நிகழ காரணமாக அமைகிறது. நன்மை நிகழ்ந்தாலும் நன்றி செல்லுத்தும் விதமாகவும், தீமை நிகழ்ந்தால் பரிகாரத்திற்காகவும் பல பொருட்களை பயன்படுத்துவது வழக்கம்.
நம்முடைய நன்மையையும், தீமையையும் எதிர்கொள்ள நம்முடைய மன திடமும், உள தைரியமும் மட்டுமே காரணம் என்ற போது. மற்ற சாத்தியங்களை குறித்து ஆராய்கிற போது தீமை நிகழ்கிற போது அதனை விலக்க பலவிதமான பொருட்களும், வழிபாட்டு முறைகளும் பின்பற்றப் படுகின்றன. அதில் முக்கியமானது மஞ்சள்.
மஞ்சள் என்பது ஆரோக்கிய ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் தீமையான கிருமிகளை அழிக்கக்கூடியது. இயல்பாகவே இந்த தன்மை இருப்பதால் ஆன்மீக ரீதியாகவும் மஞ்சள் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. அதே வேளையில் மஞ்சளில் பல ரகங்களும் உண்டு. குறிப்பாக கரு மஞ்சள் என்கிற வகை தீமையான ஆற்றலை அழிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
கருமஞ்சளை நீங்கள் வாங்கிய பின், அதிகாலையில் எழுந்து குளித்து நீராடி, கிழக்கு நோக்கி அமர்ந்து கருமஞ்சள் நோக்கி நீங்கள் வழிபட துவங்கலாம். கருமஞ்சள் விதைகளை கைகளில் வைத்து வழிபடுங்கள். முடிந்தால் அதனை 108 முறை சுழற்றி வழிபடுங்கள். அதன் பின் சூரிய கடவுளை வழிபடுங்கள். இப்போது கருமஞ்சள் நீங்கள் பயன்படுத்த தயாராகி விடும். கருமஞ்சளின் விதைகளில் ஒன்பது விதைகளை எடுத்து கைகளில் அணியாக அணிந்து கொள்ளலாம். இது தீமையான ஆற்றல்கள் நம்மை அண்டாமல் தடுக்கும்.
மேலும் கருமஞ்சள் மூலம் உருவாக்கப்பட்ட திலகத்தை வெளியில் செல்லும் போது, உதாரணமாக நேர்காணல் போன்ற முக்கியமான காரணங்களுக்காக செல்லும் போது பூசிக்கொள்ள வெற்றிகளுக்கான சாத்தியங்கள் கூடும். அடுத்து பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டால், குங்குமம் மற்றும் கரு மஞ்சளை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மஹாலட்சுமிக்கு அர்பணித்து வர பொருளாதார சிக்கல் தீரும் என்பது நம்பிக்கை.
அடுத்து வியாபாரத்தில் பெரிய இழப்புகளை தொடர்ந்து சந்தித்து வந்தால், மஞ்சள் துணியில் சிறிது கருமஞ்சள், 11 கோமதி சக்கரங்கள் மற்றும் வெள்ளி காசு ஆகியவை வைத்து ஓம் வாசுதேவாய நமஹ என்ற மந்திரத்தை உச்சரித்து தொழில் இடத்தில் வைப்பது நல்லது. மேலும் கருமஞ்சள் விதைகளை கட்டி வீட்டின் வாசலில் கட்டினால் தீய திருஷ்டிகளிலிருந்து விடுபட்டு நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருவர் அனுபவிக்கலாம்.