மரணித்த பின் உயிர்கள் இறுதி தீர்ப்புக்காக சென்று நிற்கும் ஆச்சர்ய எமன் கோவில்

Update: 2022-08-09 02:41 GMT

நீங்கள் அரசனோ ஆண்டியோ காலனின் கண்களுக்கு நீங்கள் எந்த வித்தியாசமும் இன்றி தான் தெரிவீர்கள். எமன் அல்லது எம தர்மராஜர் என அழைக்கப்படுபவர் தான் முதன் முதலில் மரணத்திற்குரியவராக இருந்தார். விஷ்ணு பரமாத்மா மற்றும் சிவபெருமானின் ஆசியுடன் அவரே மரணத்திற்கான மன்னராக அறிவிக்கப்பட்டார்.

மரணம் என்கிற ஒற்றை விஷயம் மட்டும் தான் இன்றளவும் மனிதகுலத்தை சுவாரஸ்யமானதாக வைத்திருக்கிறது. மரணம் என்பது எவ்வாறு இருக்கும் என்பது தொடங்கி மரணித்த பின் என்ன நேரும் என்பது வரை நமக்குள்ள சுவாரஸ்ய கேள்விகள் ஏராளம்

வேதங்களின் படி சொல்லப்படும் கதை என்னவெனில் எமதர்மரை தன் ஞானத்தால் கவர்ந்த சிறுவன் நசிகேத்தாவிடம் எமதர்மர் மரணத்தின் ரகசியத்தை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. நசிகேதன் எமனிடம் மூன்று வரங்களை கேட்டு பெற்றார் என புராணங்கள் சொல்கின்றன்ன. முதல் வரம் அவனுடைய தந்தையின் எதிர்ப்பார்ப்பற்ற அன்பு கிடைக்க வேண்டும், இரண்டாவது அக்னி வித்யாவை பற்றி முழுமையான ஞானம் வேண்டும் இறுதியாக மரணத்தை பற்றியும் ஆத்மஞானம் பற்றிய முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

மற்ற இரண்டு வரங்களை வழங்கிய போதும், கடைசி வரத்தை கொடுக்க தயங்கிய எமனையே மடக்கி அந்த ரகசியத்தை நசிகேதன் அறிந்து கொண்டானாம்.

இமாலையத்தில் சம்பா பகுதியில் பார்மோருக்கு அருகில் எமதர்மராஜருக்கு கோவிலுண்டு அதுவே அவருக்காக அர்பணிக்கப்பட்ட ஒரே முக்கிய கோவில் என சொல்லப்படுகிறது.

இந்த கோவிலுனுள் அவருடைய வாகனத்துடனும், சித்ரகுப்தருடனும் அவர் வாழ்வதாக அப்பகுதி மக்களால் நம்ப்பப்படுகிறது. கோவிலுனுள் மேல் விட்டம் வரை செல்லக்கூடிய ஒரு காலி தூண் ஒன்று உண்டு இந்த கோவிலுனுள் செல்லவே சிலர் அச்சம் கொள்ளதும் உண்டாம். இந்த கோவிலுனுள் சித்ரகுப்தருக்கும் தனி அறை உண்டாம்.

உடலை விட்டு பிரியும் ஒவ்வொறு உயிரும் இந்த கோவிலின் வாசலிலேயே அதன் இறுதி தீர்ப்பிற்காக வந்து காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த இடத்தில் நிலவும் சொல்லமுடியாத வானிலை அதாவது சொல்லில் அடங்கா குளிரும் அதன் தன்மையும் யாரையும் அசைத்து பார்க்கும் என்பது மற்றுமொரு கூடுதல் தகவல்.

Similar News