காமதேனு சிலையை இவ்வாறு வைப்பதன் மூலம் தொடர் தோல்விகளிலிருந்து விடுபடலாம்
நம் மரபில் தெய்வீக தன்மை என்பது உயிரற்ற பொருட்கள் தொடங்கி, ஐந்தறிவுள்ள உயிர்கள் வரை நீள்வதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் காமதேனு பசு என்பது மிகவும் தெய்வீகத்தன்மை வாய்ந்த அம்சமாக கருதப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் காமதேனு படத்தை வைப்பதென்பது அபரிமீதமான பலன்களை கொடுக்க கூடியதாக இருக்கிறது. காமதேனு பசு என்பது நம் புராணங்களின் படி ஆச்சர்யமான பசுவாகும். பசு இனங்களுக்கெல்லாம் தாய் என்று கருதப்படுகிறது. இறைத்தன்மை நிறைந்த பசுவாக விளங்கும் காமதேனுவும் அதன் கன்று நந்தினியும் இந்திய கலாச்சாரத்திலும் நம் ஆன்மீக மரபிலும் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகின்றனர். இந்த திருவுருவத்தை சரியான இடத்தில் வைக்கிற போது அது வெற்றிகளை அள்ளி வழங்குகிறது மற்றும் தடைகளை தகர்த்து எரிகிறது.
அமுதம் வேண்டி கடலை கடைந்த போது கிடைத்த அரிய பொக்கிஷங்களீல் ஒன்று காமதேனு. மேலும் கேட்கும் வரத்தை நல்கும் அரிய குணம் உடையது காமதேனு. செல்வ வளம், சுய தியாகம், இயற்கை, பரிசுத்தம் மற்றும் செழிப்பு இவைகளின் அம்சமாக காமதேனு கருதப்படுகிறது.
வாழ்கை மிகவும் மந்தமானதாக செல்கிறது என்று நினைப்பவர்கள் காமதேனுவின் திருவுருவத்தை வெள்ளிக்கிழமை பூஜையறையில் வைத்து பூஜிக்க வேண்டும்.
வியாபாரத்தில் இருப்பவர்கள் வரவை விடவும் செலவு அதிகமாக இருக்கிறது என்று எண்ணினால் அவர்கள் காமதேனுவின் திருவுருவை வியாபாரம் நிகழும் அறையில் தென் மேற்கு பகுதியில் திங்கள் கிழமை வைத்து வழிபட வேண்டும்.
மேலும் பொருளாதார சிக்கல்களில் இருக்கும் யாவரும் அவர்கள் இருக்கும் வீட்டின் வடக்கு மூலையில் காமதேனுவை வைத்து வழிபடலாம்.
பொருளாதாரம் மட்டுமின்றி சகல விதமான பிரச்சனைகளின் தீர்வாகும் விளங்குகிறது காமதேனு வழிபாடு.
ஒருவர் காமதேனுவை வழிபடுவதன் மூலம் பார்வதி, சரஸ்வதி, மகாலட்சுமி ஆகிய முப்பெரும் தேவிகளின் அருளை ஒருங்கே பெரும் பக்தராகிறார். காமதேனு வழிபாட்டின் மூலம் ஒருவர் விரும்பும் வரத்தை, அமைதியை ஆனந்தத்தை பெற முடியும்.
ஏன் காமதேனுவிற்கு இத்தனை சிறப்பு எனில், அதன் நான்கு கால்களும் நான்கு வேதத்தை குறிப்பதாக இருக்கிறது. அதன் கொம்பு மும்மூர்த்திகளான பிரம்மர், சிவபெருமான் விஷ்ணு பரமாத்மாவை குறிக்கிறது. சூரியனும் சந்திரனும் காமதேனுவின் கண்களீல் குடிகொண்டிருக்கின்றனர். ஐம்பெரும் பூதங்களும் அதன் தோள்களில் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். காமதேனுவிற்கு சுரபி என்ற பெயரும் உண்டு.