ஆராய்ச்சியாளர்களுக்கே அதிசயமாக விளங்கும் நீரில் மிதக்கும் விஷ்ணு பெருமான்

Update: 2022-08-17 02:46 GMT

பூத நீலகண்டர் ஆலயம் நேபாலில் உள்ள புத்த நீலகண்டா எனும் இடத்தில் அமைந்துள்ளது. காட்மண்டுவில் சமவெளியின் வடக்கில் சிவபுரி மலையடிவாரத்தில் திறந்தவெளியில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் விஷ்ணு பரமாத்மாவிற்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட தலமாகும். இந்த கோவிலை ஜல் நாரயண ஆலயம் என்றும் அழைக்கின்றனர். இங்கு மிக ஆச்சர்யகரமான தரிசனத்தை நாராயணர் நல்குகிறார். ஆதிஷேசன் மீது யோக நித்திரை கொன்டு சயன கோலத்தில் அருள் பாலிக்கிறார். நேபாளத்தில் இருக்கும் இந்து திருவுருங்களில் இந்த ஶ்ரீ ஆனந்த சயன நாரயணரே மிகப்பெரிய திருவுருவமாகும்.

அதாவது இக்கோவிலின் மையப்பகுதியில் அமைந்துள்ள மிக பிரமாண்டமான குளத்தில் 5 மீட்டர் நீளமுள்ள நாராயணரின் திருவுருவம், 13 மீட்டர் நீளம் கொண்ட நீர் குளத்தின் நடுவே சயன கோலத்தில் அருள் பாலிக்கிறார். அவர் சயனம் கொண்டிருக்கும் ஆதிஷேசன் படுக்கையும் நாரயணரும் ஒரே கருங்கல்லினால் செய்யப்பட்டவை என்பது மேலும் ஆச்சர்யத்தை அளிக்கிறது.

பூத நீலகண்டர் எனும் பெயரை ஒரு சிலர் புத்த நீலகண்டர் என புரிந்து கொண்டு, புத்தருடன் தொடர்பு படுத்துகின்றனர். இதில் உண்மையிருக்க வாய்ப்பில்லை. இக்கோவில் நேபாளத்தில் இருப்பதால் இப்படியொரு குழப்பம் நேர்ந்திருக்கலாம். உண்மையில் பூத நீலகண்டர் என்பது பழைய நீல நிறத்தில் இருக்க கூடிய தொண்டை என்று சமஸ்கிருதத்தில் பொருள் படுகிறது. நீலகண்டர் என்கிற பதம் ஆலகால விஷத்தை பருகியதால் சிவபெருமானுக்கு உரிய திருப்பெயராக கருதப்படுகிறது. இருப்பினும், பிரம்மா சிவன், விஷ்ணு திருமூர்த்தி ரூபமென்பதால் இங்கு இவரை பூத நிலகண்டர் என்று அழைக்கிறார்களோ என்கிற நம்பிக்கையும் உண்டு.

நம் புராணத்தின் படி அதாவது பாகவத புராணம், விஷ்ணு புராணம், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் எல்லாம் சமுத்ர மந்தனம் என்பதை குறிக்கின்றன. சமுத்திர மந்தன் என்பது நேபாளத்தில் உள்ள கோசாய் குண்டத்தை குறிப்பதாகும். நீலகண்டர் துயில் கொண்டிருக்கும் குளத்திற்கும் சிவபெருமானின் அருள் நிரம்பிய கோசாய் குண்டத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த குளத்தின் மீது அருள் பாலிப்பவர் விஷ்ணு பரமாத்மாவாக இருந்தாலும் அந்த குளம் சிவபெருமானின் அருள் நிரம்பிய கோசாய் குண்டத்துடன் தொடர்பு கொண்டிருப்பதால் இந்த பெயர் பொருத்தமானதாக கருதப்படுகிறது.

இந்த கோவிலின் மற்றொரு சிறப்பாக இது வைணவ தலமாக இருந்தாலும், இங்கே அருள் பாலிப்பவர் புத்தர் தான் என்ற நம்பிக்கையில் பல புத்த மத்தத்தை இங்கே வந்து வழிபடுகின்றனர்.

மத நல்லிணக்கத்தை இந்த ஆலயத்தில், இத்தனை ஆண்டுகளாக நீரின் மீது விஷ்ணு பரமாத்மா எவ்வாறு மிதந்த நிலையிலேயே இருக்கிறார் என்பது ஆராய்சியாளர்களுக்கே பெரும் வியப்பை தருவதாக இருக்கிறது.

Similar News