புது வீடு கட்டும் ஆசையா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள் நினைப்பது நடக்கும்

Update: 2022-08-18 01:52 GMT

சிறுவாபுரி பாலசுப்ரமணியர் கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இது சென்னையின் அருகில் இருக்கும் திருவள்ளூரில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 40 கி.மீ தொலைவில் சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு அதிகாரப்பூர்வமாக இருக்கும் பெயர் யாதெனில் சிறுவம்பேடு என்பதாகும். அதாவது இக்கோவில் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில் ராமபிரான் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய பின், அவருடைய பட்டாபிஷேகத்திற்கு பிறகு சீதையை சில காரணங்களுக்காக வனத்திற்கு அனுப்பினார். அப்போது அங்கே சீதைக்கு லவனும், குசனும் பிறந்தனர். அதன் பின் ஒரு முறை அஸ்வமேத யாகம் செய்ய முடிவு செய்தார். மனைவியின்றி அஸ்வமேத யாகம் செய்யகூடாது என்பது விதி. ஆனால் அந்த விதியை மீறி அவருடைய அஸ்வம பல நாடுகள், தேசங்கள் சுற்றி வந்தது, வந்திருக்கும் அஸ்வம் தன் தந்தையினுடையது என்பதை அறியாத பாலகர்கள் அந்த அஸ்வத்தை தங்கள் கட்டுப்பாட்டில் பிடித்து வைத்தனர்.

விபரம் அறிந்த இராமர், குதிரையை மீட்க இலக்குவனை அனுப்பினார். ஆனால் அவரால் அந்த சிறுவர்களிடமிருந்து குதிரையை மீட்க முடியவில்லை. இதை கண்டு ஆச்சர்யமடைந்த இராமர், அவரே நேரில் வந்து குதிரையை மீட்டார் என்பது புராணம்.

இந்த ராமாயன செய்தியை, "சிறுவராகி இருவர் கரிபதாதி கொடுஞ்சொல் சிலை ராமன் உடன் எதிர்த்து ஜெயமானநகர்" என திருப்புகழ் இத்தலம் குறித்து பாடுகிறது. எனில் லவனும் குசனும் அம்பெடுத்து போர்தொடுத்த இடம் என சொல்லப்படுகிறது.

சிறுவர் அம்பு எடு த்து என்பதின் சுருக்கமாகவே இத்தலம் சிறுவம்பேடு என அழைக்கப்பட்டதாகவும், இதையே வேறு விதமாக சொன்னால் சிறுவர்கள் போர் புரிந்தார்கள் என்பதை குறிக்கும் விதமாக சிறுவர் போர் புரி என்பதே மருவி சிறுவாபுரி என்றானதாகவும் சொல்லப்படுகிறது.

இங்கிருக்கும் மூலவருக்கு ஶ்ரீ பால சுப்ரமணியர் என்பது திருப்பெயர். இந்த அழகு நிறைந்த கோவிலில் திரு அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையாருக்கும் தனி சந்நிதி உண்டு. மேலும் இந்த கோவிலின் உற்சவருக்கு வள்ளி மணாளர் என்பது பெயர் காரணம் இவர் திருமண கோலத்தில் பவனி வருகிறார். இந்த கோவிலின் தனிச்சிறப்பு யாதெனில், இங்கு புதிதாக வீடு கட்ட விருப்பம் உள்ளவர்கள் இக்கோவிலில் வந்து வழிபட்டு சென்றாஅல் புது வீடு பிராப்தம் அமையும் என்பது நம்பிக்கை. 

Similar News